Sep 27, 2009

ICC Champion Trophy 2009ல் பாகிஸ்தான் அணியின் பால் ஈர்ப்பு அபிநயங்கள்


உலகில் எந்த பாகத்திலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் போட்டியில் மோதுகிறது என்றால், போட்டி நடைபெறும் அந்த மைதானத்தில் பார்வையாளர் தொகையும் அலையாய் மோதிக்கொண்டுதான் இருக்கும். இவ்வாறு மக்கள் தொகை அதிகம் காணப்படும் ஒரு சுற்றுப்போட்டி தான் இந்த ICC CHAMPIONS TROPHY.

இம்முறை(2009) நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சுற்றுப்போட்டியில் சென்ற சனிக்கிழமை (26-09-09) அன்று , இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்தது என்பது ஒரு புறம் இருக்க , இந்த போட்டியில் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களின் அபிநயங்களை பார்க்கும் போது சற்று கவலைக்கிடமானதாகத்தான் உள்ளது.

ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் திறமையக துடுப்பெடுத்தாடி இந்திய அணிக்கு 303 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி வெற்றி இலக்கை கருத்தில் கொண்டு மிகவும் மெதுவான ஆரம்பத்துடன் தன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. துடுபாட்ட ஆரம்பத்தின் போது கெளத்தம் கம்பீர் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர் மொஹமெட் அமீரின் ஒரு பந்துக்கு முகம் கொடுக்காது தவிர்த்து விடவெ அமீர், கம்பீருக்கு முத்தம் கொடுப்பது போன்று அபிநயம் காட்டினார். மேலும் இந்திய அணித்தலைவர் மஹெந்திரசிங் டோனி , அப்ரைடியின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழக்க, சந்தோஷத்தினால் பூரிப்படைந்த ஒரு பாகிஸ்தான் வீரர் அப்ரைடியை பின்புறமாக கட்டியனைக்க , அப்ரைடி உடன் அவருக்கு முத்தம் இடும் காட்சியானது மிகவும் ஒரு அருவெறுப்பான செயற்பாடு ஆகும்.

இவ்வாறான செயற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்று கொண்டால் எதிர்கால சந்ததியினரின் நிலைதான் என்ன? !!!!!!!

Media One News


உலக மக்களுக்கு எம்மால் முடிந்த வரையிலான இந்த உலகில் நடக்கும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் ஆதாரபூர்வமாக தருவதற்காக இணைந்த வாலிபர் குழாம் நாம். அந்த வகையில் எல்லா நிறுவனங்களும் தங்களை முகவரிப்படுத்தி கொள்வதற்காக தமக்கென ஒரு பெயர் சூட்டி கொள்கின்றது. அது போன்று தான் நாம் எமக்கு சூட்டிகொண்ட பெயர் ”மீடியா வன்”("Media One").

இந்த நண்பர்கள் குழாம் இந்த பெயரை சூடிகொண்டது அழகிற்காக அல்ல. இந்த உலகில் முதன்மையான ஒரு நேர்மையான ஊடகமாக திகழவேண்டும் என்பதற்காகவே. அவ்வாறு ஆரம்ப கட்டத்தில் எம்மை இந்த சூழலோடு பழக்கபடுத்தி கொள்வதற்காக இந்த் குழாம் தங்களை வியாபார விரிவாக்கலுக்கு உதவும் ஒரு அணியாக அறிமுகபடுத்தி கொண்டது. ஆரம்ப கட்டத்தில் இலங்கையில் வெளிவரும் ஒரு சஞ்சிகைகாக இரு தடவை விரிவாக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டது. இந்த செயற்பாட்டிற்காக பல்வேறுபட்ட இடங்களுக்கு எமது குழாம் பயணித்தது. இந்த செயற்பாட்டில் பண்முகத்தாரோடும் எமது நேர்காணல்கள் இடம் பெற்றது. இதன் மூலம் அந்த பிரதேச மக்களின் பிரச்சனைகள் கண்டறிய பட்டது. அந்த பிரச்சனைகள் தொடர்பான தெளிவான கட்டுரைகளை இனி வரும் காலங்களில் எமது இந்த blog பகுதியில் நீங்கள் காணலாம்.

இந்த பகுதியில் உங்களுடன் கூட நாங்கள் கலந்துரையாட தயாராக உள்ளோம். உண்மயான செய்திகளை பிரசுரிப்பத்ற்காக நீங்களும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் ஆதார பூர்வமாக......

நீங்கள் எம்முடன் இணைந்து கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி
moneadverts@gmail.com