
|

|

| சர்வதேச ரீதியாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளில் இலங்கை 7 வது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்தம் காரணமாக 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போரினாலும் நாட்டில் குழப்பநிலை மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் வரிசையில் பாக்கிஸ்தான் முதலாவது இடத்தில் உள்ளது. இதேபோல, கொங்கோ குடியரசு இரண்டாவது நிலையிலும், நீண்ட யுத்தத்தினால் பாதிப்படைந்த சூடான் 3 வது இடத்திலும், சோமாலியா நான்காவது இடத்திலும் உள்ளன. இஸ்லாமிய போராளிகளின் ஆதிக்கம் பெரிய அளவில் உள்ள பிலிப்பீன்ஸ் 5 வது இடத்தில் உள்ள அதேவேளை, ஆறாவது இடத்தில் கொலம்பியா என அந்த ஆய்வறிக்கையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக அதிகரித்து வரும் யுத்தங்கள் மற்றும் உள்நாட்டு மோதல்கள் காரணமாக 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் நீண்டகாலமாக வாழ்வதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. |


| புலம்பெயர்ந்த தமிழர்களின் காத்திரமான அரசியல் முன்னெடுப்பாக சர்வதேசம் கருதும் நாடுகடந்த அரச அமைப்பானது இலங்கையைப் பீதிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இலங்கை அரசின் சார்பில் நாடு கடந்த அரசு தொடர்பாக விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா முதலைக்கண்ணீர் வடித்துள்ளார். |
இலங்கையின் துணை மீள்குடியேற்ற அமைச்சரான கருணா இன்று இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில், இந்த தமிழீழ நாடுகடந்த அரசமைக்கும் முயற்சியால் புலம் பெயா்ந்த தமிழர்கள் மூன்றாகப் பிரிந்து நிற்பதாகவும், எனவே இம் முயற்சி சாத்தியப்படும் தன்மை இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளதுடன், இலங்கையில் எந்தவித ஆதரவையுமே பெறாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி தமிழீழ விடுதலை தொடர்பான இன்னொரு கனவே என்று பரிகசித்துள்ளதுடன், இவ்வாறு இந்த முயற்சியை முன்னெடுப்போர் மூன்று பிரிவுகளாக இந்த விவகாரத்தில் பிரிந்துள்ளதால், இது விடயத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அக்கறையை அவ்வளவு வெளிக்காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள உருத்திரகுமாரன் தலைமையிலான ஒரு பிரிவு, நோர்வேயிலுள்ள நெடியவன் தலைமையிலான இன்னொரு பிரிவு, லண்டனிலுள்ள இன்னொருவர் தலைமையிலான இன்னொரு பிரிவு என மூன்று பிரிவுகளை கருணா சுட்டிக்காட்டியுள்ளார். கருணாவின் இக் கூற்றானது இப் பணியை முன்னெடுத்துச் செல்லும் உருத்திரகுமாரன் தலைமையிலான மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிற்கு மாசு கற்பிக்கும் விதமான இலங்கை அரசின் பிரசாரங்களை முன்னெடுக்கும் பிரசாரங்களில் ஒன்று என்பதையும், நாடு கடந்த அரசு தொடர்பாக இலங்கை அரசு அடைந்துள்ள பீதியை தனது பேட்டியில் கருணா வெளிக்காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நாடு கடந்த அரசானது திரு. உருத்திரகுமாரனது முயற்சியில் உருவான ஒரு வலுமிக்க அமைப்பு என்பதும் எத்தகைய எதிர்ப்புக்களிற்கு மத்தியில் அவர் இதனை நடைமுறைப்படுத்தினார் என்பதும் தமிழ் மக்கள் அறிந்ததே. எனவே இவ்வாறு இலங்கை விரும்புவது போல இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பிரிவுகளாக உள்ளவர்கள் குழப்புவதற்கு இடமளிக்காமல் முன்னெடுத்துச் செல்வதே இலங்கையின் பிரச்சாரத்தை முறியடிக்கும். குறிப்பாக நாடு கடந்த அரச தேர்தலில் வாக்களித்த தமிழ்மக்கள் தங்களின் வாக்குக்கள் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தது உருத்திரகுமாரனின் இந்த நாடுகடந்த அரச செயற்பாட்டை தங்குதடையின்றி மேற்கொள்ளவே என்பதை அதன் உறுப்பினர்கள் நன்கு அறிந்துள்ள நிலையில் இவ்வாறு இலங்கை அரசு விரும்பும் பிரிவினை ஏற்பட தாங்கள் காரணமாய் அமைய மாட்டார்கள் என்பது உறுதி. எனவே மக்கள் தற்போதைய நாடுகடந்த அரசின் தலைமைக்கும் அதன் உறுப்பினர்களிற்கும் தொடர் ஆதரவை வழங்குவார்கள் என்பது திண்ணம் |

... பத்மப்ரியாவை விட்டுடுங்கய்யா. நானும்அவங்களும் கல்யாணம் பண்ணிக்கிறோம்னு முக்கிய தலைகள் சில பேருக்கு கடிதம் வந்திருக்கு கேரளாவிலிருந்து. கோடம்பாக்கத்தில் உலாவரும் இந்த மினி சைஸ் அணுகுண்டை போட்ட அநாமத்து வாலிபன் யாராக இருக்கும் என்று மண்டையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள் அந்த முக்கிய தலைகள். முன்னணி நடிகைகள் பலருக்கும் மேனேஜராக இருக்கும் மனோஜ் என்பவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்ததாம். அதில் தனது பெயரை குறிப்பிடாத வாலிபர் ஒருவர், பத்மப்ரியாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு வாங்கி தர்றீங்க. பொக்கிஷம் படத்தின் போதே அவளுக்கு கல்யாணம் வரப்போவுது. வேணாம் இந்த வேலைன்னு கடிதம் அனுப்புனேன். கேட்காம செஞ்சிங்க. அதுக்கு பிறகு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்கும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திங்க. இதனால் எங்க கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கு. இதோட இந்த வேலைய நிறுத்திக்கணும். இல்லேன்னா நடக்கிறதே வேறன்னு மிரட்டியிருக்காராம் அந்த ஆசாமி. கேரளா வரைக்கும் போன் போட்டு விசாரிச்சதில கிடைச்ச தகவல் இதுதான். அஜய்குமார்னு ஒரு வாலிபருக்கும் பத்மப்ரியாவுக்கும் பழக்கம் இருப்பதாகவும் அவர்தான் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கார்னும் கிசுகிசுக்கிறாங்க. ஆச்சர்யம் என்னவென்றால் பத்மப்ரியாவிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சேரன், லாரன்ஸ், மேலும் சில நடிகைகளின் மேனேஜர்களுக்கும் இந்த கடிதத்தின் நகலை அனுப்பியிருக்கிறாராம் இந்த மொட்டை கடுதாசி வாலிபர். |

| தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பாக காலத்திற்குக் காலம் முரண்பட்ட தகவல்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். ஆனால் தேசியத்தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தமிழ் மக்கள் தாங்களாகவே விளங்கிக் கொள்ள வேண்டும் என்று த. தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். |
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு பா. அரியநேத்திரன் அவர்கள் இது குறித்து தெரிவித்தவை வருமாறு; தலைவர் கடந்த வருடம் மார்ச் 17ஆம் திகதி கொல்லப்பட்டாரென இலங்கை அரசாங்கம் முதலில் அறிவித்தது. ஆனால் 18ஆம் திகதி தான் அவர் கொல்லப்பட்டாரென ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் யுத்த முனையில் நின்று படையினரை வழிநடத்தியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 19ஆம் திகதி தான் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று ஒரு வருடத்தின் பின்னர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வேறு தரப்பினர் கூட வேறு திகதிகளைச் சொல்லக்கூடும். எனவே பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கிறாரா? உயிருடன் உள்ளாரா? என்பதைத் தமிழ் மக்கள் சுயமாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். |

மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, ஆசிஷ் நெஹ்ரா, ஜடேஜா ஆகியோர் ரகளையில் ஈடுபட்டதாக மீது புகார் கூறப்பட்டது. வீரர்களின் இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக இன்று நடந்த கூட்டத்தின்போது, மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் இந்திய வீரர்கள் ரகளையில் ஈடுபட்டது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து 4 பேர் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.சி.சி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
| இதுவரை கவர்ச்சி க்கு ஓட்டுப் போடாமல் இருந்து வந்த பாவனா இப்போது கவர்ச்சிக் கட்சிக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம். |
வாய்ப்புகள் வராமல் போனதற்கு பாவனாவும் கூட ஒரு காரணம். முன்னணி நடிகர்களோடு மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்பதை ஒரு பாலிசியாகவை வைத்துள்ளதால் பீல்டில் படு ஹாட்டாக இருக்கும் பிற இளம் நாயகர்கள் பாவனாவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் வருத்தம் அடைந்திருந்த பாவனா, இந்த பட வாய்ப்புப் பஞ்சத்தைப் போக்க கவர்ச்சி கோதாவில் குதிக்கத் தயாராகி விட்டார். இதற்காக கவர்ச்சிகரமான போஸ்களுடன் புதிய ஆல்பத்தை கோலிவுட்டில் ரவுண்டு அடிக்க விட்டுள்ளாராம். கிளாமர் களத்தில் குதித்து கோலிவுட்டில் தன்னை ஆணித்தரமாக நிரூபிக்க முடிவு செய்துள்ள பாவனா, சைடில், விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளாராம். சினேகாவைப் போல திரைப்படங்களோடு விளம்பரங்களிலும் விறுவிறுப்பாக நடிக்கப் போகிறாராம். |
| இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தனி ஈழம்தான் சரியான தீர்வு. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை இனப்படுகொலை அரசாக அறிவித்து, தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது. |
நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் மாநாடு மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் பேசியதாவது: இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டபோது, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதை தட்டிக் கேட்கவில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களிடம் தமிழுணர்வு செத்துப்போகவில்லை என்பதைக் காட்டுவதற்காகவே, இந்த மாநாடு நடைபெறுகிறது. உயிரைவிட மேலானதாக மொழியையும் இனத்தையும் நேசிக்கிறோம். உலகின் கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்த ஆட்சியாளர்களை நாம் அதிகாரத்திலிருந்து இறக்க வேண்டும். தற்போது, ஜனநாயக அரசியலை படுகொலை செய்யும் வகையில் பணநாயக அரசியல் உள்ளது. பணம் கொடுத்து வாக்குரிமையை விலைக்கு வாங்குவதை, நாம் தடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி படித்தவர்கள் அரசியலுக்கு வருவதுதான். அரசியல் சாக்கடை என ஒதுங்கிவிடக் கூடாது. படித்தவர்கள் அரசியலுக்கு வராதவரை இந்த அவலநிலை நீடிக்கும் என்றார் சீமான். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் பயங்கரவாதச் செயல்களுக்கு துணைபோவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களைக் கலைத்து விட்டு, அனைத்து ஈழத்தமிழர்களும் சுதந்திரமாக வாழ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறையில் உள்ள நளினி, குணங்குடி ஹனீபா போன்றவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களக் கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிய மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுவரை சிங்களக் கடற்படையினரின் தாக்குதலுக்கு 450 தமிழக மீனவர்கள் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலேசியாவில் வாழும் 4.5 லட்சம் தமிழர்களுக்கும், மலேசிய அரசியல் சாசன சட்டத்தின்படி குடியுரிமை வழங்க, இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் காந்திய இயக்கம் தமிழருவி மணியன், மலேசிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, சாகுல் ஹமீது, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டை முன்னிட்டு மலர் வெளியிடப்பட்டது. மாநாட்டில், தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர் குடும்பத்தினருக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயர் பொறித்த கேடயம், விருதுகள் வழங்கப்பட்டன. தேவநேயப் பாவாணர் குடும்பத்தினருக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது. முன்னதாக, மாநாட்டையொட்டி தெப்பக்குளத்திலிருந்து மாநாட்டுத் திடல் வரை பேரணி நடைபெற்றது. பேரணியை விரகனூர் சுற்றுச்சாலை அருகே சீமான் பார்வையிட்டார். |
| இலங்கையில் சீரற்ற காலநிலை தொடர்கிறது. இதன் காரணமாக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மழை வெள்ளம் காரணமாக இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. |
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு, மாகாண சுகாதாரத் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. |