May 24, 2010

கண்ணைத்திறக்கனும் சாமி


சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சிக்கியிருக்கும் தனது மனைவி, 2 மகன்களை மீட்டுத் தருமாறு நெல்லையை சேர்ந்த பழ வியாபாரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.
பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்தவர் சகாய ஜார்ஜ்(40). பழவியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்ய விமலா (35). மகன்கள் அருண் பிரகாஷ் (14), அஜய் ஆண்ட்ரோ (12). நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங்கிடம், சகாயஜார்ஜ் நேற்று காலை புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2006ம் என் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நெல்லை விடுதியில் தங்கி இருந்த சேலம் ஆத்தூரைச் சேர்ந்த ஓசோமணி கொடுத்த விளம்பரத்தை பார்த்து அவரிடம் எனது மனைவியை அழைத்துச் சென்றேன். தன்னை நித்யானாந்தாவின் சீடர் என்றும், தீராத வியாதிகளை தீர்த்து வைப்பேன் என்றும் ஓசோமணி கூறினார். அதை நம்பி எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினேன். ஒருநாள் ஓசோமணி, எங்கள் வீட்டுக்கு வந்து ஆரோக்யவிமலாவுக்கு அக்குபஞ்சர் வைத்தியம் செய்வதாக கூறி ரூ.50 ஆயிரம் வாங்கினார். நித்யானந்தாவின் பெருமைகளை கூறி, எனது மனைவிக்கு ருத்ராட்ச மாலை அணிவித்தார். அதன்பிறகு எனது மனைவி நித்யானந்தாவின் தீவிர பக்தையானாள். வீடு முழுவதும் நித்யானாந்தாவின் படங்களை வைத்து பூஜித்து வந்தார்.

எனது மனைவி, மகன்களை ஓசோமணி பெங்களூர் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். நித்யானா ந்தாவால் செயல்படுத்தப்பட்டு வரும் `பிசி‘ சேவை திட்டத்தில் எனது மனைவியை உறுப்பினராக்கினார்.

இதற்காக ரூ.5 ஆயிரத்தையும் ஓசோமணி பெற்றுக் கொண்டார். நித்யானந்தா பங்கேற்கும் ஆன்மீக சொற்பொழிவு, தியான பீடங்களுக்கும் எனது மனைவியை அழைத்துச் சென்றார். இது எனக்கு பிடிக்காததால் கண்டித்தேன்.

இந்நிலையில் சாமியார் நித்யானாந்தாவின் பாலியல் லீலைகள் பத்திரிகையில் வெளியாயின.

இதை பார்த்த நான், ஓசோமணியிடம் போனில் பேசினேன். எனது மனைவி, குழந்தைகள் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக கூறினார். ஆசிரமத்துக்கு சென்ற போது என் மனைவியைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஓசோமணியையும் சந்திக்க முடியவில்லை. என் மனைவி, மகன்களை வசியம் செய்து அழைத்துச் சென்ற ஓசோமணி மற¢றும் நித்யானாந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனைவி, மகன்களை அவர்களிடமிருந்து மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்

சொல்லுவதைவிட செயல்களே அதிகம் வெற்றி பெறும்


புலம்பெயர்ந்த தமிழர்களின் காத்திரமான அரசியல் முன்னெடுப்பாக சர்வதேசம் கருதும் நாடுகடந்த அரச அமைப்பானது இலங்கையைப் பீதிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இலங்கை அரசின் சார்பில் நாடு கடந்த அரசு தொடர்பாக விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா முதலைக்கண்ணீர் வடித்துள்ளார்.

இலங்கையின் துணை மீள்குடியேற்ற அமைச்சரான கருணா இன்று இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில், இந்த தமிழீழ நாடுகடந்த அரசமைக்கும் முயற்சியால் புலம் பெயா்ந்த தமிழர்கள் மூன்றாகப் பிரிந்து நிற்பதாகவும், எனவே இம் முயற்சி சாத்தியப்படும் தன்மை இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளதுடன்,

இலங்கையில் எந்தவித ஆதரவையுமே பெறாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி தமிழீழ விடுதலை தொடர்பான இன்னொரு கனவே என்று பரிகசித்துள்ளதுடன், இவ்வாறு இந்த முயற்சியை முன்னெடுப்போர் மூன்று பிரிவுகளாக இந்த விவகாரத்தில் பிரிந்துள்ளதால், இது விடயத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அக்கறையை அவ்வளவு வெளிக்காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள உருத்திரகுமாரன் தலைமையிலான ஒரு பிரிவு, நோர்வேயிலுள்ள நெடியவன் தலைமையிலான இன்னொரு பிரிவு, லண்டனிலுள்ள இன்னொருவர் தலைமையிலான இன்னொரு பிரிவு என மூன்று பிரிவுகளை கருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணாவின் இக் கூற்றானது இப் பணியை முன்னெடுத்துச் செல்லும் உருத்திரகுமாரன் தலைமையிலான மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிற்கு மாசு கற்பிக்கும் விதமான இலங்கை அரசின் பிரசாரங்களை முன்னெடுக்கும் பிரசாரங்களில் ஒன்று என்பதையும், நாடு கடந்த அரசு தொடர்பாக இலங்கை அரசு அடைந்துள்ள பீதியை தனது பேட்டியில் கருணா வெளிக்காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த அரசானது திரு. உருத்திரகுமாரனது முயற்சியில் உருவான ஒரு வலுமிக்க அமைப்பு என்பதும் எத்தகைய எதிர்ப்புக்களிற்கு மத்தியில் அவர் இதனை நடைமுறைப்படுத்தினார் என்பதும் தமிழ் மக்கள் அறிந்ததே. எனவே இவ்வாறு இலங்கை விரும்புவது போல இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பிரிவுகளாக உள்ளவர்கள் குழப்புவதற்கு இடமளிக்காமல் முன்னெடுத்துச் செல்வதே இலங்கையின் பிரச்சாரத்தை முறியடிக்கும்.

குறிப்பாக நாடு கடந்த அரச தேர்தலில் வாக்களித்த தமிழ்மக்கள் தங்களின் வாக்குக்கள் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தது உருத்திரகுமாரனின் இந்த நாடுகடந்த அரச செயற்பாட்டை தங்குதடையின்றி மேற்கொள்ளவே என்பதை அதன் உறுப்பினர்கள் நன்கு அறிந்துள்ள நிலையில் இவ்வாறு இலங்கை அரசு விரும்பும் பிரிவினை ஏற்பட தாங்கள் காரணமாய் அமைய மாட்டார்கள் என்பது உறுதி. எனவே மக்கள் தற்போதைய நாடுகடந்த அரசின் தலைமைக்கும் அதன் உறுப்பினர்களிற்கும் தொடர் ஆதரவை வழங்குவார்கள் என்பது திண்ணம்