Dec 29, 2009

சுரண்ட நினைத்து... புரண்டு போன அரசு!!!!!!!!!

எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக ஸ்லின் 143 இசட் விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக நம்பத்தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்திற்கான உரிமை மற்றும் பொறுப்பு என்பவற்றை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது போனதால் அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். எரித்திரியாவில் 10 விமானங்கள் இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்ற விமானப் படை மற்றும் அரச அதிகாரிகள் எரித்திரிய விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் மாத்திரம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு விமானங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எரித்திரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானங்களின் உரிமை மற்றும் பொறுப்பாளிகள் யார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவற்றை விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்ல அனுமதித்ததாக அந்த விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையச் சொன்னா வழக்கு, பொய்ய சொன்ன துவக்கு!!!!


சண்டேலீடர் பத்திரிகைக்கு ஜெனரல் சரத் பொன்சேக்கா வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்து திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டமை சம்பந்தமாக 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அவர் சண்டேலீடர் ஆசிரியர் பெட்ரிக்கா ஜயன்ஸூக்கு தனது சட்டத்தரணி ஊடாக நேற்று அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளார்.
தான் தெரிவித்த கருத்துக்களைத் திரிபுபடுத்தியமை தொடர்பாக சட்டத்தரணி அறிவித்தலை அனுப்பியுள்ள சரத் பொன்சேக்கா 38 வருடகாலமாக இராணுவத்தில் பணியாற்றி ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை 14 நாட்களுக்குள் சரிசெய்யுமாறும் அப்படியில்லை எனில் தமக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக சண்டேலீடர் பத்திரிகை 500 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இவை நிறைவேற்றப்படாவிட்டால், தான் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கப் போவதாகவும் சரத் பொன்சேக்கா கூறியுள்ளார்

மாயமாய் மறையும் மனிதர்கள், மகுடம் சூடிய மந்திரவாதி யாரோ? வெள்ளைவான்


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பாஸ்போட் எடுக்க வந்த, யாழ்ப்பாணம் கொட்டடியை சேர்ந்த 21 வயதான செல்வக்குமார் என்ற இளைஞர் காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 14ம் திகதி ஏ9 வீதியூடாக வவுனியா பயணித்த இவர், வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு யாழ்தேவி மூலம் பயணம் மேற்கொண்டார் எனவும் மேலும் இவரை அழைத்து போக கொழும்பு புகையிரத நிலையத்தில் காத்திருந்தவர், அவரை பல மணி நேரம் காத்திருந்தும் கண்டுகொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளனர்.


குறித்த நபர் உணவு விடுதியில் வேலை செய்து வந்தவர் எனவும் , வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்காக பாஸ்போட் எடுக்க கொழும்பு பயணித்தார் எனவும் குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.