
|

|

| சர்வதேச ரீதியாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளில் இலங்கை 7 வது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்தம் காரணமாக 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போரினாலும் நாட்டில் குழப்பநிலை மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் வரிசையில் பாக்கிஸ்தான் முதலாவது இடத்தில் உள்ளது. இதேபோல, கொங்கோ குடியரசு இரண்டாவது நிலையிலும், நீண்ட யுத்தத்தினால் பாதிப்படைந்த சூடான் 3 வது இடத்திலும், சோமாலியா நான்காவது இடத்திலும் உள்ளன. இஸ்லாமிய போராளிகளின் ஆதிக்கம் பெரிய அளவில் உள்ள பிலிப்பீன்ஸ் 5 வது இடத்தில் உள்ள அதேவேளை, ஆறாவது இடத்தில் கொலம்பியா என அந்த ஆய்வறிக்கையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக அதிகரித்து வரும் யுத்தங்கள் மற்றும் உள்நாட்டு மோதல்கள் காரணமாக 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் நீண்டகாலமாக வாழ்வதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. |


| புலம்பெயர்ந்த தமிழர்களின் காத்திரமான அரசியல் முன்னெடுப்பாக சர்வதேசம் கருதும் நாடுகடந்த அரச அமைப்பானது இலங்கையைப் பீதிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இலங்கை அரசின் சார்பில் நாடு கடந்த அரசு தொடர்பாக விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா முதலைக்கண்ணீர் வடித்துள்ளார். |
இலங்கையின் துணை மீள்குடியேற்ற அமைச்சரான கருணா இன்று இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில், இந்த தமிழீழ நாடுகடந்த அரசமைக்கும் முயற்சியால் புலம் பெயா்ந்த தமிழர்கள் மூன்றாகப் பிரிந்து நிற்பதாகவும், எனவே இம் முயற்சி சாத்தியப்படும் தன்மை இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளதுடன், இலங்கையில் எந்தவித ஆதரவையுமே பெறாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி தமிழீழ விடுதலை தொடர்பான இன்னொரு கனவே என்று பரிகசித்துள்ளதுடன், இவ்வாறு இந்த முயற்சியை முன்னெடுப்போர் மூன்று பிரிவுகளாக இந்த விவகாரத்தில் பிரிந்துள்ளதால், இது விடயத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அக்கறையை அவ்வளவு வெளிக்காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள உருத்திரகுமாரன் தலைமையிலான ஒரு பிரிவு, நோர்வேயிலுள்ள நெடியவன் தலைமையிலான இன்னொரு பிரிவு, லண்டனிலுள்ள இன்னொருவர் தலைமையிலான இன்னொரு பிரிவு என மூன்று பிரிவுகளை கருணா சுட்டிக்காட்டியுள்ளார். கருணாவின் இக் கூற்றானது இப் பணியை முன்னெடுத்துச் செல்லும் உருத்திரகுமாரன் தலைமையிலான மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிற்கு மாசு கற்பிக்கும் விதமான இலங்கை அரசின் பிரசாரங்களை முன்னெடுக்கும் பிரசாரங்களில் ஒன்று என்பதையும், நாடு கடந்த அரசு தொடர்பாக இலங்கை அரசு அடைந்துள்ள பீதியை தனது பேட்டியில் கருணா வெளிக்காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நாடு கடந்த அரசானது திரு. உருத்திரகுமாரனது முயற்சியில் உருவான ஒரு வலுமிக்க அமைப்பு என்பதும் எத்தகைய எதிர்ப்புக்களிற்கு மத்தியில் அவர் இதனை நடைமுறைப்படுத்தினார் என்பதும் தமிழ் மக்கள் அறிந்ததே. எனவே இவ்வாறு இலங்கை விரும்புவது போல இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பிரிவுகளாக உள்ளவர்கள் குழப்புவதற்கு இடமளிக்காமல் முன்னெடுத்துச் செல்வதே இலங்கையின் பிரச்சாரத்தை முறியடிக்கும். குறிப்பாக நாடு கடந்த அரச தேர்தலில் வாக்களித்த தமிழ்மக்கள் தங்களின் வாக்குக்கள் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தது உருத்திரகுமாரனின் இந்த நாடுகடந்த அரச செயற்பாட்டை தங்குதடையின்றி மேற்கொள்ளவே என்பதை அதன் உறுப்பினர்கள் நன்கு அறிந்துள்ள நிலையில் இவ்வாறு இலங்கை அரசு விரும்பும் பிரிவினை ஏற்பட தாங்கள் காரணமாய் அமைய மாட்டார்கள் என்பது உறுதி. எனவே மக்கள் தற்போதைய நாடுகடந்த அரசின் தலைமைக்கும் அதன் உறுப்பினர்களிற்கும் தொடர் ஆதரவை வழங்குவார்கள் என்பது திண்ணம் |

... பத்மப்ரியாவை விட்டுடுங்கய்யா. நானும்அவங்களும் கல்யாணம் பண்ணிக்கிறோம்னு முக்கிய தலைகள் சில பேருக்கு கடிதம் வந்திருக்கு கேரளாவிலிருந்து. கோடம்பாக்கத்தில் உலாவரும் இந்த மினி சைஸ் அணுகுண்டை போட்ட அநாமத்து வாலிபன் யாராக இருக்கும் என்று மண்டையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள் அந்த முக்கிய தலைகள். முன்னணி நடிகைகள் பலருக்கும் மேனேஜராக இருக்கும் மனோஜ் என்பவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்ததாம். அதில் தனது பெயரை குறிப்பிடாத வாலிபர் ஒருவர், பத்மப்ரியாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு வாங்கி தர்றீங்க. பொக்கிஷம் படத்தின் போதே அவளுக்கு கல்யாணம் வரப்போவுது. வேணாம் இந்த வேலைன்னு கடிதம் அனுப்புனேன். கேட்காம செஞ்சிங்க. அதுக்கு பிறகு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்கும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திங்க. இதனால் எங்க கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கு. இதோட இந்த வேலைய நிறுத்திக்கணும். இல்லேன்னா நடக்கிறதே வேறன்னு மிரட்டியிருக்காராம் அந்த ஆசாமி. கேரளா வரைக்கும் போன் போட்டு விசாரிச்சதில கிடைச்ச தகவல் இதுதான். அஜய்குமார்னு ஒரு வாலிபருக்கும் பத்மப்ரியாவுக்கும் பழக்கம் இருப்பதாகவும் அவர்தான் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கார்னும் கிசுகிசுக்கிறாங்க. ஆச்சர்யம் என்னவென்றால் பத்மப்ரியாவிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சேரன், லாரன்ஸ், மேலும் சில நடிகைகளின் மேனேஜர்களுக்கும் இந்த கடிதத்தின் நகலை அனுப்பியிருக்கிறாராம் இந்த மொட்டை கடுதாசி வாலிபர். |