Dec 23, 2009

சோதனை மேல் சோதனை போதுமட சாமி - யாழ் மக்கள் அவலம்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் பணப்பறிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தி கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீண்டும் விடுவிப்பதாகக் கூறியே இந்தப் பணப்பறிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்தி கிராமசேவர்களிடம் காணமல் போனவர்களிடன் உறவினர்களின் விபரங்களையும், தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு பெறப்படும் தொலைபேசி இலங்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி காணாமல் போனவரை விடுவிப்பதானால் குறிப்பிட்ட வங்கி இலக்கத்திற்கு சென்ற அவர்களால் தீர்மானிக்கப்படும் பணத்தினை வைப்பிலிடுமாறு கூறுகின்றனர். இவ்வாறு வங்கியில் பணத்தினை வைப்புச் செய்தும் பல இடங்களுக்கு உறவினர்கள் அலக்களிக்கப்பட்டும் காணாமல் போனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதனை அறிந்த உறவினர்கள் படை முகாங்களிலும் , காவல்நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இங்கு குறிப்பிட்டது போன்று, புலம் பெயர் நாட்டில் வதிக்கும் 55 அகவை மதிக்கத்தக்க ஒருவர் தனது மகனின் விடுதலைக்காக 20 இலட்சம் இலங்கை ரூபாக்களை வட்டிக்கு எடுத்து வழங்கிய போதும், அவரின் மகன் விடுதலை செய்யப்படவில்லை. குறித்த கும்பலால் தொடர்புக்காக வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கமும் வேலைசெய்யவில்லை என ஏமாந்தவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐந்தில் வளையாதது அறுபதில் வளைந்து கின்னஸ் சாதனை


அமிதாப் பச்சன் 12 வயது சிறுவனாக நடித்த பா திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பா படம் வெளியாவதற்கு முன்பே, அந்தப் படத்தில் அமிதாப்பின் பாத்திரம் நிச்சயம் ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளையும், பெருமைகளையும் பெறும் என்று பலரும் கூறினர்.

இப்போது அது நிரூபணமாகி வருகிறது. வசூலில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ள பா, இப்போது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறுகிறது. 67 வயதில் நடிகர் ஒருவர் 12 வயது சிறுவனாக நடித்தது உலகிலேயே இதுதான் முதல்முறை என்பதால் அமிதாப் பச்சனுக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது.

குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் - கணனிக்கல்வி


கணனியில் சின்னதாய் எது வித பாதிப்பும் இல்லாத ஒரு வைரஸ் பற்றி மீடியா வண் உங்களுக்கு சொல்லித்தரப் போகிறது. இந்த வைரஸை உருவாக்க கணனியில் அடிப்படை அறிவு மாத்திரம் இருந்தால் போதும். மேலும் இந்த வைரஸை பற்றி கற்கமுன் நாங்கள் வைரஸ் என்றால் என்ன என்றுவென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

வைரஸை செய்பவர்கள் யார்? , எதற்காக இதனை செய்ய வேண்டும்? ,இதனால் அவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?

இந்த கேள்விகளை என்றாவது நாம் எமக்குள் கேட்டிருந்தோம் ஆனால் பல உண்மைகள் எமக்கு புலப்பட்டடிருக்கும். இந்த வைரஸை செய்பவர்கள் யார் என்று பார்போமாக இருந்தால், வைரஸை தடுக்கும் மென்பொருட்கள் உருவாக்கும் அதே நிறுவனங்கள் தான் இந்த வைரஸையும் உருவாக்குகின்றன. இந்த வைரஸை எதற்காக செய்ய வேண்டும் என்று பார்த்தால் , இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் கணனி இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம் அவ்வாறு இருக்க இந்த கணனிக்கு ஏதாவது ஒரு இடையூரை விளைவித்து பணம் சம்பாதிக்கும் ஒரு திட்டம் தான் இது. இதனால் என்ன பலன் அவர்களுக்கு கிடைகும் என்று பார்த்தால், இந்த வைரஸை உருவாக்கும் நபர்களிடம் இருந்து அந்த வைரஸையும் அதற்கான தீர்வையும் , வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கும். சிலவேளைகளில் ஏலம் கூட விடப்படும். ஆகவே வைரஸ் என்றால் கணனிக்கு தடைகளை ஏற்படுத்த கூடிய விடயம் என்று சகலரும் இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். இப்பொது புரிகிறதா ஏன் வாலிபர்களது மனதில் கணனி பொறியியலாளர் ஆகவேண்டும் என்ற கனவு இருகிறதென்று.

சரி இப்போது நாங்கள் வைரஸ் செய்ய தொடங்கலாம். கவலை படத்தேவை இல்லை இந்த வைரஸை செய்ய எதுவித கண்னி மென்பொருட்களின் மொழிகளும் தேவையில்லை.

படி நிலை 1 :- உங்கள் விசைபலகையில் உள்ள print screen என்ற buttonஜ அழுத்தவும்.

படி நிலை 2 :- ms paintஜ open செய்து அங்கே edit சென்று paste செய்யவும்.

படி நிலை 3 :- பின் அதை புகைபட கட்டமைபில் (jpeg) பதிவு(save) செய்து கொள்ளவும்.

படி நிலை 4 :- தொடர்ந்து பதிவு செய்த புகைபடத்தை உங்கள் கணனியின் முகப்பு படமாக மாற்றுக ( propeties --> desktop--> browse--> பதிவு (save) செய்த படம் .

படி நிலை 5 :- அதன்பின் முகப்பு பகுதியில் மெளசை right click செய்யவும் அதில் தோன்றும் மெனுவில் arrenge icon typeக்கு சென்று show desktop என்ற optionஜ deselect செய்யவும்.

படி நிலை 6 :- start button மீது ridgt click செய்து propeties என்ற optionaஜ தெரிவுசெய்யவும் அதன்பின் taskbar tabஜ தெரிவுசெய்து அதில் auto hide taskbar என்ற optionஜ தெரிவுசெய்யுங்கள் இப்பொது உங்கள் task bar மறைந்து படமாய் தோன்றும்.

இப்பொது உங்கள் முகப்பு பகுதியில் தெரிவது வெறும் புகை படமே தவிர எந்த ஒரு iconஉம் அல்ல யார் double click செய்தாலும் எதுகும் open ஆகாது.

மீழ்வதற்கு (படி நிலை 4) முகப்பு புகைப்படத்தை மாற்றிவிட்டு படி நிலை 5ல் deselcet செய்த optionஜ select செய்யுங்கள்

media One :- Raveendran Tharsan ( Promotion Manager ,Journalist & HND IT Student)

வானை எட்டி பிடிக்கும் 4ஜி

தற்போது அறிமுகமாகியுள்ள "3 ஜி' மொபைல் தொழில் நுட்பத்தை விட, 40 மடங்கு வேகமான "4 ஜி' தொழில் நுட்பம் விரைவில் வெளிவரவுள்ளதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த சாப்ட்வேர் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் புதுமை' பற்றிய தேசிய கருத்தரங்கம், பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் நடந்தது. ஆஸ்திரேலியா, "பிரவாகனா சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் பாலகிஷனானே, கம்ப்யூட்டர் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்கள் பற்றி விளக்கினார்.


அவர் பேசுகையில், ""இன்றைய கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் படுவேகமான உலகுக்கு அனைவரையும் அழைத்துச் செல்கிறது. தற்போது அறிமுகமாகியுள்ள "3 ஜி' மொபைல் தொழில் நுட்பம், இன்டர்நெட் தொழில் நுட்பத்தை விட படுவேகமானது.

இதற்கு அடுத்தபடியாக, "4 ஜி' தொழில் நுட்பம் வரவிருக்கிறது. 4 ஜி தொழில் நுட்பம், 3 ஜி தொழில் நுட்பத்தை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்தது.

சாதாரண பிராட் பேண்ட் தொழில் நுட்பத்தை விட 20 - 40 மடங்கு வேகமானது. இத்தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன,'' என்றார்.

கப்பலை திசை திருப்ப வாயினால் காற்றூதும் அரசு


அவுஸ்திரேலியாவிற்கு அகதி அந்தஸ்து கோரி சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்களுள் 3 விடுதலை புலி உறுப்பினர்களும் அடங்குவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள் அவுஸ்திரேலிய அகதி அந்தஸ்து கோரும் ஏனைய 255 பேரினது அகத் அந்தஸ்து கோரிக்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெகார்த்தாவிலுள்ள இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் இவர்களை அடையாளம் கண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவர் சேனக வல்கம்பாய 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளார்.விடுதலை புலிகள் தொடர்பாக கிடைத்த புகைப்படங்களின் அடைப்படையில் இவ் முன்னாள் போராளிகள் இனங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள இவ்வறிப்பை அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மறுத்துள்ளதுடன், அவுஸ்திரேலியா விடுதலை புலிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது