Sep 30, 2009

சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் (7.6 magnitude )


சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக பலர் உயிர் இழந்து இருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் பொழுது, BNO இணைய செய்தி பிரிவினர் இதுவரை நேரம் வரை (2009/10/01 SLTIME 11.25 a.m) 464 பேர் உயிரிழந்த்து உள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டு உள்ளனர்.

இதே வேளையில் BBC 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் பாதுகாப்பு கருதி மின் துண்டிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் கருத்து தெரிவித்த ஜகட்ர இயற்கை அழிவு அமைச்சு தலைவர் “ருச்டம் பகய” 1000 பேர் இறந்திருக்ககூடும் என்றும் கூறியுள்ளார்.


ICC CHAPMPIONS TROPHY 2009 அரையிறுதி போட்டிகளில் அவுஸ்ரேலியா, இங்கிலாந்து , பாகிஸ்தான் , நியூஸ்லாந்து












இது வரை நடை பெற்ற போட்டிகளின் பிரகாரம் அவுஸ்ரேலிய அணி இரு போட்டிகளில் வெற்றி பெற்றும் , இந்தியாவுடனான போட்டி மழை காரணமாக தடைபட்டமையால் அந்த போட்டி புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 5 புள்ளிகளை பெற்று, குழு A பிரிவில் முதலிடத்தை பெற்று கொண்டது அவுஸ்ரேலிய அணி. மேலும் பாகிஸ்தான் அணி இரு போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்று, குழு A பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்து கொண்டது.

ஆகவே குழு Aயில் அரை இறுதி போட்டிக்கு தெரிவான அணிகள் அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான்.

குழு Bயில் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன், ஓட்ட விகித அடிபடையில் நியூஸ்லாந்து முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதன் அடிபடையில் குழு Bயில் அரை இறுதி போட்டிக்கு நியூஸ்லாந்து மற்றும் இங்கிலாந்து அணி தெரிவாகி உள்ளது.

இந்த அரை இறுதி போட்டி நாளையும் (ஒக்டோபர் 2/2009) நாளை மறுதினமும் நடை பெறவுள்ளமை குறிபிடத்தக்கது. நாளைய போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணியும், நாளை மறு நாள் போட்டியில் நியூஸ்லாந்து ற்றும் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன. இந்த இரு போட்டிகளுமே பகல் இரவாட்டம் என்பது குறிபிடத்க்கது.

மேற்குறிபிட்டவை எல்லாம் ஒரு புற்ம் இருக்க கடந்த காலங்களில் சிறப்பாக பிரகாசித்த இலங்கை, இந்தியா ம்ற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இந்த போட்டிகளில் பிரகாசிக்க தவறிவிட்டார்கள்.

என்ன தான் செய்வது இவர்கள் வாழ்கையிலும் சனி பெயர்ச்சியோ என்னவோ?