Dec 30, 2009

தேர்தல் நாடகத்தில் நகைச்சுவை கட்டங்கள் - மாறி மாறி நஷ்டஈடு


முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொட, எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார்.
ஜெனரல் பொன்சேகா, கடந்த 24ம் திகதி தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக அட்மிரால் கரன்னாகொட குறிப்பிட்டுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதியின் சார்பில் சட்டத்தரணி அதுல பிரியதர்சன டி சில்வாவின் ஊடாக ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த செவ்வியின் ஊடாக அட்மிரால் கரன்னாகொடவிற்கு, அவப்பெயர் ஏற்படுத்த ஜெனரல் பொன்சேகா முயற்சித்துள்ளார் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த நட்ட ஈட்டுப் பணத்தை 14 தினங்களுக்குள் கொடுக்கத் தவறும் பட்சத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.