May 25, 2010

வாய்சொல்லில் வீரரடி


உள்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ள நக்சலைட்களை ஒடுக்குவோம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2வது முறையாக ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி, பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நக்சலைட் வன்முறை, தீவிரவாதம், ஐ.பி.எல். கிரிக்கெட் விவகாரம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, நதி நீர் பங்கீடு பிரச்னை, தனி மாநில கோரிக்கை, வளர்ச்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் பற்றி சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பிரதமர் மன்மோகன் சிங் சளைக்காமல் பதில் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:

நக்சலிசம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். சட்டம்&ஒழுங்கு மாநில அரசின் பிரச்னை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் நக்சலைட்கள் வன்முறையை ஒடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவத் தான் வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த விவகாரத்தில் உள்துறை
அமைச்சர் சிதம்பரம் தனக்கு சில வரம்புகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறியது பற்றி கேட்கிறீர்கள். இதற்கு அவரே விளக்கம் அளித்து இருக்கிறார். சில வியூகங்களை உரிய அமைச்சரவையின் உரிய குழுக்களில் தான் விவாதிக்க முடியும்.
இடதுசாரி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய, மாநில அரசுகளிடையே கருத்து வேறுபாடு கிடையாது. மாவோயிஸ்ட்களுக்கு சில வழிகளில் நிதி கிடைக்கிறது. அதை வைத்து ஆயுதங்கள் வாங்குகிறார்கள்.
சில மனித உரிமை அமைப்புகள் நக்சல் திட்டங்கள் பற்றி பிரசாரம் செய்வதை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த உரிமை உண்டு. வன்முறையை பரப்பாதவரை எந்த தடையும் விதிக்கப்பட மாட்டாது. நக்சலிசம், தீவிரவாதம் இரண்டையும் கட்டுப்படுத்தாவிட்டால் நமது பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.
ஐ.பி.எல். விவகாரம்:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மீதான புகார்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்த புகார்கள் குறித்து நிதியமைச்சகம் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறது. தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதி வாரி சென்சஸ்:
மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் நான் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறேன். இந்த விஷயத்தில் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துக்களை பரிசீலிக்குமாறு அமைச்சரவையை கேட்டு இருக்கிறேன். இது பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்படும். எந்த முடிவை எடுத்தாலும் அதை மக்களுக்கு அறிவிப்போம்.
முஸ்லிம் கல்வி:
கல்வி மற்றும் பயிற்சிகளில் முஸ்லிம்கள் எந்த அளவுக்கு ஈடுபட வேண்டுமோ, அந்த அளவுக்கு ஈடுபடவில்லை. அவர்களது பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது. சச்சார் கமிட்டி அறிக்கையிலும் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் கல்வி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 15 அம்சத் திட்டத்தை உண்மை, நேர்மையுடன் செயல்படுத்துவோம்.
கற்பனைக் குதிரை:
இடதுசாரிகளின் ஆதரவை நீங்கள் தவற விட்டு விட்டீர்களா? என்ற கேள்விக்கு பிரதமர் அளித்த பதில்:
‘‘எண்ணங்கள் குதிரைகளானால், பிச்சைக்காரர்கள் கூட அதில் ஏறி சவாரி செய்யலாம்’’ என்ற பழமொழி தான் என் நினைவுக்கு வருகிறது.
(அர்த்தமற்ற கற்பனைகள், ஆசைகள் மூலம் அடைய முடியாததை அடையலாம் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது)
இந்த பழமொழியை கூறிய பிரதமர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, ‘‘ஒரே கருத்துடைய கட்சிகள் மக்கள் நலனிலும், நாட்டு வளர்ச்சியிலும் அக்கறைக் கொண்டு ஆதரவு தர முன் வந்தால் வரவேற்போம்’’ என்றார்.
தீவிரவாதம்:
இந்து தீவிரவாதம் வளர்ந்து வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ‘‘தீவிரவாதத்தை மதத்துடன் இணைப்பதை நான் ஏற்க மாட்டேன். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. சில சக்திகள் தங்களது கொடுமையான செயல்களுக்கு மதச்சாயம் பூச முயற்சிக்கின்றன. இந்த சக்திகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்தியா நிபந்தனை:
பாகிஸ்தான் உடனான உறவு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், ‘‘இரு நாடுகளின் உறவில் நம்பிக்கை குறைபாடு தான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பாகிஸ்தான் தனது எல்லையை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடக்கூடாது என்ற நிபந்தனையைத் தான் இந்தியா விதிக்கிறது’’ என்றார்

சோதனையிலும் சாதனை


சர்வதேச ரீதியாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளில் இலங்கை 7 வது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்தம் காரணமாக 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரினாலும் நாட்டில் குழப்பநிலை மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் வரிசையில் பாக்கிஸ்தான் முதலாவது இடத்தில் உள்ளது.

இதேபோல, கொங்கோ குடியரசு இரண்டாவது நிலையிலும், நீண்ட யுத்தத்தினால் பாதிப்படைந்த சூடான் 3 வது இடத்திலும், சோமாலியா நான்காவது இடத்திலும் உள்ளன.

இஸ்லாமிய போராளிகளின் ஆதிக்கம் பெரிய அளவில் உள்ள பிலிப்பீன்ஸ் 5 வது இடத்தில் உள்ள அதேவேளை, ஆறாவது இடத்தில் கொலம்பியா என அந்த ஆய்வறிக்கையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக அதிகரித்து வரும் யுத்தங்கள் மற்றும் உள்நாட்டு மோதல்கள் காரணமாக 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் நீண்டகாலமாக வாழ்வதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

May 24, 2010

கண்ணைத்திறக்கனும் சாமி


சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சிக்கியிருக்கும் தனது மனைவி, 2 மகன்களை மீட்டுத் தருமாறு நெல்லையை சேர்ந்த பழ வியாபாரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.
பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்தவர் சகாய ஜார்ஜ்(40). பழவியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்ய விமலா (35). மகன்கள் அருண் பிரகாஷ் (14), அஜய் ஆண்ட்ரோ (12). நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங்கிடம், சகாயஜார்ஜ் நேற்று காலை புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2006ம் என் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நெல்லை விடுதியில் தங்கி இருந்த சேலம் ஆத்தூரைச் சேர்ந்த ஓசோமணி கொடுத்த விளம்பரத்தை பார்த்து அவரிடம் எனது மனைவியை அழைத்துச் சென்றேன். தன்னை நித்யானாந்தாவின் சீடர் என்றும், தீராத வியாதிகளை தீர்த்து வைப்பேன் என்றும் ஓசோமணி கூறினார். அதை நம்பி எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினேன். ஒருநாள் ஓசோமணி, எங்கள் வீட்டுக்கு வந்து ஆரோக்யவிமலாவுக்கு அக்குபஞ்சர் வைத்தியம் செய்வதாக கூறி ரூ.50 ஆயிரம் வாங்கினார். நித்யானந்தாவின் பெருமைகளை கூறி, எனது மனைவிக்கு ருத்ராட்ச மாலை அணிவித்தார். அதன்பிறகு எனது மனைவி நித்யானந்தாவின் தீவிர பக்தையானாள். வீடு முழுவதும் நித்யானாந்தாவின் படங்களை வைத்து பூஜித்து வந்தார்.

எனது மனைவி, மகன்களை ஓசோமணி பெங்களூர் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். நித்யானா ந்தாவால் செயல்படுத்தப்பட்டு வரும் `பிசி‘ சேவை திட்டத்தில் எனது மனைவியை உறுப்பினராக்கினார்.

இதற்காக ரூ.5 ஆயிரத்தையும் ஓசோமணி பெற்றுக் கொண்டார். நித்யானந்தா பங்கேற்கும் ஆன்மீக சொற்பொழிவு, தியான பீடங்களுக்கும் எனது மனைவியை அழைத்துச் சென்றார். இது எனக்கு பிடிக்காததால் கண்டித்தேன்.

இந்நிலையில் சாமியார் நித்யானாந்தாவின் பாலியல் லீலைகள் பத்திரிகையில் வெளியாயின.

இதை பார்த்த நான், ஓசோமணியிடம் போனில் பேசினேன். எனது மனைவி, குழந்தைகள் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக கூறினார். ஆசிரமத்துக்கு சென்ற போது என் மனைவியைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஓசோமணியையும் சந்திக்க முடியவில்லை. என் மனைவி, மகன்களை வசியம் செய்து அழைத்துச் சென்ற ஓசோமணி மற¢றும் நித்யானாந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனைவி, மகன்களை அவர்களிடமிருந்து மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்

சொல்லுவதைவிட செயல்களே அதிகம் வெற்றி பெறும்


புலம்பெயர்ந்த தமிழர்களின் காத்திரமான அரசியல் முன்னெடுப்பாக சர்வதேசம் கருதும் நாடுகடந்த அரச அமைப்பானது இலங்கையைப் பீதிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இலங்கை அரசின் சார்பில் நாடு கடந்த அரசு தொடர்பாக விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா முதலைக்கண்ணீர் வடித்துள்ளார்.

இலங்கையின் துணை மீள்குடியேற்ற அமைச்சரான கருணா இன்று இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில், இந்த தமிழீழ நாடுகடந்த அரசமைக்கும் முயற்சியால் புலம் பெயா்ந்த தமிழர்கள் மூன்றாகப் பிரிந்து நிற்பதாகவும், எனவே இம் முயற்சி சாத்தியப்படும் தன்மை இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளதுடன்,

இலங்கையில் எந்தவித ஆதரவையுமே பெறாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி தமிழீழ விடுதலை தொடர்பான இன்னொரு கனவே என்று பரிகசித்துள்ளதுடன், இவ்வாறு இந்த முயற்சியை முன்னெடுப்போர் மூன்று பிரிவுகளாக இந்த விவகாரத்தில் பிரிந்துள்ளதால், இது விடயத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அக்கறையை அவ்வளவு வெளிக்காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள உருத்திரகுமாரன் தலைமையிலான ஒரு பிரிவு, நோர்வேயிலுள்ள நெடியவன் தலைமையிலான இன்னொரு பிரிவு, லண்டனிலுள்ள இன்னொருவர் தலைமையிலான இன்னொரு பிரிவு என மூன்று பிரிவுகளை கருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணாவின் இக் கூற்றானது இப் பணியை முன்னெடுத்துச் செல்லும் உருத்திரகுமாரன் தலைமையிலான மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிற்கு மாசு கற்பிக்கும் விதமான இலங்கை அரசின் பிரசாரங்களை முன்னெடுக்கும் பிரசாரங்களில் ஒன்று என்பதையும், நாடு கடந்த அரசு தொடர்பாக இலங்கை அரசு அடைந்துள்ள பீதியை தனது பேட்டியில் கருணா வெளிக்காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த அரசானது திரு. உருத்திரகுமாரனது முயற்சியில் உருவான ஒரு வலுமிக்க அமைப்பு என்பதும் எத்தகைய எதிர்ப்புக்களிற்கு மத்தியில் அவர் இதனை நடைமுறைப்படுத்தினார் என்பதும் தமிழ் மக்கள் அறிந்ததே. எனவே இவ்வாறு இலங்கை விரும்புவது போல இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பிரிவுகளாக உள்ளவர்கள் குழப்புவதற்கு இடமளிக்காமல் முன்னெடுத்துச் செல்வதே இலங்கையின் பிரச்சாரத்தை முறியடிக்கும்.

குறிப்பாக நாடு கடந்த அரச தேர்தலில் வாக்களித்த தமிழ்மக்கள் தங்களின் வாக்குக்கள் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தது உருத்திரகுமாரனின் இந்த நாடுகடந்த அரச செயற்பாட்டை தங்குதடையின்றி மேற்கொள்ளவே என்பதை அதன் உறுப்பினர்கள் நன்கு அறிந்துள்ள நிலையில் இவ்வாறு இலங்கை அரசு விரும்பும் பிரிவினை ஏற்பட தாங்கள் காரணமாய் அமைய மாட்டார்கள் என்பது உறுதி. எனவே மக்கள் தற்போதைய நாடுகடந்த அரசின் தலைமைக்கும் அதன் உறுப்பினர்களிற்கும் தொடர் ஆதரவை வழங்குவார்கள் என்பது திண்ணம்

May 21, 2010

எனக்கும் பத்மப்ரியாவுக்கும்...


... பத்மப்ரியாவை விட்டுடுங்கய்யா. நானும்அவங்களும் கல்யாணம் பண்ணிக்கிறோம்னு முக்கிய தலைகள் சில பேருக்கு கடிதம் வந்திருக்கு கேரளாவிலிருந்து. கோடம்பாக்கத்தில் உலாவரும் இந்த மினி சைஸ் அணுகுண்டை போட்ட அநாமத்து வாலிபன் யாராக இருக்கும் என்று மண்டையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள் அந்த முக்கிய தலைகள்.

முன்னணி நடிகைகள் பலருக்கும் மேனேஜராக இருக்கும் மனோஜ் என்பவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்ததாம். அதில் தனது பெயரை குறிப்பிடாத வாலிபர் ஒருவர், பத்மப்ரியாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு வாங்கி தர்றீங்க. பொக்கிஷம் படத்தின் போதே அவளுக்கு கல்யாணம் வரப்போவுது. வேணாம் இந்த வேலைன்னு கடிதம் அனுப்புனேன். கேட்காம செஞ்சிங்க. அதுக்கு பிறகு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்கும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திங்க. இதனால் எங்க கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கு. இதோட இந்த வேலைய நிறுத்திக்கணும். இல்லேன்னா நடக்கிறதே வேறன்னு மிரட்டியிருக்காராம் அந்த ஆசாமி.

கேரளா வரைக்கும் போன் போட்டு விசாரிச்சதில கிடைச்ச தகவல் இதுதான். அஜய்குமார்னு ஒரு வாலிபருக்கும் பத்மப்ரியாவுக்கும் பழக்கம் இருப்பதாகவும் அவர்தான் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கார்னும் கிசுகிசுக்கிறாங்க. ஆச்சர்யம் என்னவென்றால் பத்மப்ரியாவிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சேரன், லாரன்ஸ், மேலும் சில நடிகைகளின் மேனேஜர்களுக்கும் இந்த கடிதத்தின் நகலை அனுப்பியிருக்கிறாராம் இந்த மொட்டை கடுதாசி வாலிபர்.

கடவுளுக்கு மட்டுமே இது வெளிச்சம்


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பாக காலத்திற்குக் காலம் முரண்பட்ட தகவல்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். ஆனால் தேசியத்தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தமிழ் மக்கள் தாங்களாகவே விளங்கிக் கொள்ள வேண்டும் என்று த. தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு பா. அரியநேத்திரன் அவர்கள் இது குறித்து தெரிவித்தவை வருமாறு;

தலைவர் கடந்த வருடம் மார்ச் 17ஆம் திகதி கொல்லப்பட்டாரென இலங்கை அரசாங்கம் முதலில் அறிவித்தது. ஆனால் 18ஆம் திகதி தான் அவர் கொல்லப்பட்டாரென ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

ஆனால் யுத்த முனையில் நின்று படையினரை வழிநடத்தியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 19ஆம் திகதி தான் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று ஒரு வருடத்தின் பின்னர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வேறு தரப்பினர் கூட வேறு திகதிகளைச் சொல்லக்கூடும்.

எனவே பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கிறாரா? உயிருடன் உள்ளாரா? என்பதைத் தமிழ் மக்கள் சுயமாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே


மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீ‌வி‌ல் மதுபான ‌விடு‌தி‌யி‌ல் இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌ள் ரகளை‌யி‌ல் ஈடுப‌ட்டது உ‌ண்மைதா‌ன் எ‌ன்று தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீ‌வி‌ல் மதுபான ‌விடு‌தி‌யி‌ல் இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌ள் யுவரா‌ஜ் ‌சி‌‌ங், ரோஹ‌ி‌த் ச‌ர்மா, ஆ‌சி‌‌ஷ் நெஹ‌்ரா, ஜடேஜா ஆ‌‌கியோ‌ர் ‌ரகளை‌யி‌ல் ஈடுப‌ட்டதாக மீது புகா‌ர் கூ‌ற‌ப்ப‌ட்டது. ‌வீர‌ர்க‌ளி‌ன் இ‌ந்த செயலு‌க்கு இ‌ந்‌திய ‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌மு‌ம் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தது.

இது தொட‌ர்பாக இ‌ன்று நட‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ன்போது, மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீ‌வி‌ல் மதுபான ‌விடு‌தி‌யி‌ல் இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌ள் ரகளை‌யி‌ல் ஈடுப‌ட்டது உ‌ண்மைதா‌ன் எ‌ன்று தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

இதை‌த் தொட‌ர்‌ந்து 4 பே‌ர் ‌மீது ‌விரை‌வி‌ல் ஒழு‌ங்கு நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌பி‌.சி.‌சி.ஐ தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

May 20, 2010

மலிந்தால் சந்தைக்கு வந்து தானே ஆகனும்

இதுவரை கவர்ச்சி க்கு ஓட்டுப் போடாமல் இருந்து வந்த பாவனா இப்போது கவர்ச்சிக் கட்சிக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம்.

அசல் படத்துக்குப் பின்னர் தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தார் பாவனா. இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை.இதனால் சற்றே சோர்ந்து போய்விட்டாராம்.

வாய்ப்புகள் வராமல் போனதற்கு பாவனாவும் கூட ஒரு காரணம். முன்னணி நடிகர்களோடு மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்பதை ஒரு பாலிசியாகவை வைத்துள்ளதால் பீல்டில் படு ஹாட்டாக இருக்கும் பிற இளம் நாயகர்கள் பாவனாவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

இதனால் வருத்தம் அடைந்திருந்த பாவனா, இந்த பட வாய்ப்புப் பஞ்சத்தைப் போக்க கவர்ச்சி கோதாவில் குதிக்கத் தயாராகி விட்டார். இதற்காக கவர்ச்சிகரமான போஸ்களுடன் புதிய ஆல்பத்தை கோலிவுட்டில் ரவுண்டு அடிக்க விட்டுள்ளாராம்.

கிளாமர் களத்தில் குதித்து கோலிவுட்டில் தன்னை ஆணித்தரமாக நிரூபிக்க முடிவு செய்துள்ள பாவனா, சைடில், விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளாராம்.

சினேகாவைப் போல திரைப்படங்களோடு விளம்பரங்களிலும் விறுவிறுப்பாக நடிக்கப் போகிறாராம்.


தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு: சீமான்

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தனி ஈழம்தான் சரியான தீர்வு. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை இனப்படுகொலை அரசாக அறிவித்து, தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் மாநாடு மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் பேசியதாவது:

இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டபோது, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதை தட்டிக் கேட்கவில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எங்களிடம் தமிழுணர்வு செத்துப்போகவில்லை என்பதைக் காட்டுவதற்காகவே, இந்த மாநாடு நடைபெறுகிறது. உயிரைவிட மேலானதாக மொழியையும் இனத்தையும் நேசிக்கிறோம். உலகின் கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்த ஆட்சியாளர்களை நாம் அதிகாரத்திலிருந்து இறக்க வேண்டும்.

தற்போது, ஜனநாயக அரசியலை படுகொலை செய்யும் வகையில் பணநாயக அரசியல் உள்ளது. பணம் கொடுத்து வாக்குரிமையை விலைக்கு வாங்குவதை, நாம் தடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி படித்தவர்கள் அரசியலுக்கு வருவதுதான். அரசியல் சாக்கடை என ஒதுங்கிவிடக் கூடாது. படித்தவர்கள் அரசியலுக்கு வராதவரை இந்த அவலநிலை நீடிக்கும் என்றார் சீமான்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் பயங்கரவாதச் செயல்களுக்கு துணைபோவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களைக் கலைத்து விட்டு, அனைத்து ஈழத்தமிழர்களும் சுதந்திரமாக வாழ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறையில் உள்ள நளினி, குணங்குடி ஹனீபா போன்றவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்களக் கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிய மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுவரை சிங்களக் கடற்படையினரின் தாக்குதலுக்கு 450 தமிழக மீனவர்கள் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலேசியாவில் வாழும் 4.5 லட்சம் தமிழர்களுக்கும், மலேசிய அரசியல் சாசன சட்டத்தின்படி குடியுரிமை வழங்க, இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் காந்திய இயக்கம் தமிழருவி மணியன், மலேசிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, சாகுல் ஹமீது, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டை முன்னிட்டு மலர் வெளியிடப்பட்டது.

மாநாட்டில், தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர் குடும்பத்தினருக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயர் பொறித்த கேடயம், விருதுகள் வழங்கப்பட்டன. தேவநேயப் பாவாணர் குடும்பத்தினருக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது.

முன்னதாக, மாநாட்டையொட்டி தெப்பக்குளத்திலிருந்து மாநாட்டுத் திடல் வரை பேரணி நடைபெற்றது. பேரணியை விரகனூர் சுற்றுச்சாலை அருகே சீமான் பார்வையிட்டார்.

அரசன் அன்று கொல்வானாம் தெய்வம் நின்று கொல்லுமாம்

இலங்கையில் சீரற்ற காலநிலை தொடர்கிறது. இதன் காரணமாக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மழை வெள்ளம் காரணமாக இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு, மாகாண சுகாதாரத் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

வணக்கம்

வணக்கம் media one newa நேயர்களுக்கு
நீண்ட நாட்களின் பின் உங்களை சந்த்திக்க வந்திருக்கின்றோம். இடையில் பல தடங்கள்கள் காரணமாக உங்களுக்கு எம்மால் முடிந்த செய்திகளை வழங்க முடியாமல் போனதற்க்கு மனம் வருந்துகின்றோம்.
எனி வரும் காலங்களில் உங்களுக்கான செய்திகளை எம்மால் முடிந்தவரை விரைவாக வழங்குவோம் என உறுதி அழிக்கின்றோம்.
எமது இந்த வலைப்பதிவில் உடனுக்குடன் செய்திகளை பதிவு செய்வதற்க்கு உங்கள் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றோம் {அதாவது உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை சேகரித்து எமக்கு அனுப்பி வையுங்கள்}
நன்றி
இப்படிக்கு
mediaonenews team

Feb 8, 2010

பணம் இருந்தால் பகைவனும் தோழன் தான்





இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் டேனி ஐபிஎல் போட்டியில் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகி பிரீத்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இணைந்து விட்டார் என்று எண்ணிவிட வேண்டாம் விளம்பரத்தில் மட்டுமே அவர்கள் இருவரும் சேர்ந்து தோன்றவுள்ளனர்.
இமாமி அழகு சாதன பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் இவர்கள் இருவரையும் தங்களின் புதிய விளம்பரத் தூதர்களாக நியமித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் தோனியும் ஜிந்தாவும் கையெழுத்திட்டுள்ளனர் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் விளம்பரம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விரைவில் வெளியாகும் என்று இமாமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகா இலங்கை படையினரால் கைது


சரத் பொன்சேகா இலங்கை படையினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளர்.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Feb 3, 2010

மோசடித் தேர்தலுக்கான நோர்பல் பரிசு - மஹிந்தவை பரிந்துரைக்கிறார் மனோ


இலங்கை வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பகிஷ்கரிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்ட வாக்களிப்பு வீதங்களுக்கு மாறாகவே மறுநாள் கூறப்பட்டன.

முதல்நாள் 70 வீதமாக இருந்த வாக்களிப்புகள் மறுநாள் 80 வீதமாக மாறியது எவ்வாறு?

தேர்தல் தினத்தன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை சிறுசிறு செயல்களில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி அன்று இரவு பாரிய வேலைகளில் ஈடுபட்டு நாட்டு மக்களின் தீர்மானத்தை மாற்றியமைத்துள்ளார்.

இது நமக்குக் கிடைத்த வெற்றி. அது பறிக்கப்பட்டமைக்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கிறோம். இதற்கு உரிய பாடத்தை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் கற்பிப்போம்.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உரையாற்றுகையில்,

நாம் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். வெவ்வேறு கொள்கைகளையுடையவர்கள். நாட்டில் அராஜகத்தை ஒழித்து ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒன்று சேர்ந்திருக்கின்றோம் என்றார்.

ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்ட புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Jan 28, 2010

மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காதாம் மணிகட்டின மாடு சொன்னாதான் கேட்குமாம்


பல்டியடித்தார் பிரபுதேவாகண்ணபிரான், இச்... எது முதலில்? இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுடன் வெளிநாட்டுக்கு பறந்து போன பிரபுதேவா நான்கு பாடல்களின் கம்போசிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.
சுடசுட வேலையை துவங்க வேண்டியதுதானே என்றால், அங்குதான் பிரச்சனையே?
எங்க தட்டினா எங்கே திறக்கும் என்பது தெரியாதவரா அமீர்? தனது படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான ஜெயம் ரவி, இடையில் இச் நோக்கி தன் பார்வையை திருப்பியது அமீரை ரொம்பவே அதிர வைத்தது. பிரபுதேவாவிடம் நேரடியாக பேசியும் ஒரு பலனும் கிடைக்காததால் சாதுர்யமாக காய் நகர்த்தினாராம். (இத்தனைக்கும் ரவியின் அப்பா எட்டிட்டர் மோகனின் சப்போர்ட் கண்ணபிரானுக்குதான் என்கிறார்கள்) அதிகார மையத்தின் அசத்தல் பொறுப்பில் இருக்கும் ஒருவரை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார் தனது படத்திற்கு. அவர் சொல்லியும் கேட்காமல் இருப்பாரா பிரபுதேவா? "உங்க படத்தை முடிச்சிட்டு வாங்க. காத்திருக்கிறேன்" என்று க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டாராம். நடுங்க வைக்கும் அந்த தயாரிப்பாளர் யார் என்பது நல்லநேரத்தில் தெரியத்தானே போகிறது?

Jan 27, 2010

பழைய குருடி கதவ திறவடி


இலங்கையின் 6வது ஜனாதிபதி தோ்தலில் மகிந்த ராஜபக்ச 18 லட்சம் அதிகப்படியான வாக்குகளினால் மாபெரும் வெற்றி

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் சகல மாவட்டங்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளநிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச போட்டி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842, 749 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.

இத்தோ்தலில் மகிந்த ராஜபக்ச 6,015,934 வாக்குகளை பெற்று;ள்ளார் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளைப் பெற்றுள்ளார்.


Jan 21, 2010

இலங்கை பொலிஸின் சாதனையா? சாட்சிக்கு இனிமேல் தான் வேதனையா?

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை நேரில் கண்டதாகக் கூறப்படும் சாட்சி ஒருவரை குற்றத் தடுப்புப் பிரிவினர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தினர். சாட்சி தொடர்பில் இரகசியங்களைப் பேணுவதற்கான தேவையுள்ளதாக கல்கிசை நீதிமன்ற நீதவான் ஹர்ஷ ஹேதுங்கவிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கான அனுமதியையும் கோரியுள்ளனர்.லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ராஜகிரியவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பிரபல ஊடகவியலாளரான லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஊடகவியலாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Jan 18, 2010

சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி



கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.

ரிக்டர் அளவு கோலில் 7.3 என்று பதிவான இந்த நில நடுக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிடங்கள் தரைமட்டமாயின. பூகம்பத்தில் சிக்கிய இந்தியர்களின் நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

பல நாடுகளிலிருந்தும் மீட்புப் பணிகளும், உதவிகளும் ஹைட்டி நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன.

சண்டை வந்தால் சட்டை கிழியத்தான் செய்யும்


இறுதிப்போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் உயிரிழந்துள்ளதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று முன்னாள் சனிக்கிழமை மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மகிந்த ராஜபக்ச அரசு போர் வெற்றியினை விற்று அரச தலைவர் தேர்தலில் வெல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நாட்டில் இனமொழி பேதங்களை ஒழித்து மக்கள் அனைவருக்கம் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மக்களது தனித்தன்மையினை பாதுகாக்க தொடர்ந்தும் உழைப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை அரசு தமது சொந்த இலாபத்திற்காகவும் ஆட்சியின் பதவிகளை தக்க வைப்பதற்காகவும் தென்பகுதி சிங்கள மக்களையும் வடபகுதி தமிழ் மக்களையும் ஒருவருக்கெருவர் எதிரிகளாக உருவாக்கும் சதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வன்னியின் இறுதிக்கட்ட போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் முப்பத்தியாறாயிரத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்

Jan 7, 2010

வேலுப்பிள்ளை காலமானார்.


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் தந்தையாரான வேலுப்பிள்ளை அவர்கள் காலமானதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தமது 86 வது வயதில் நேற்று காலமானதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.

இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jan 6, 2010

தேர்தல் போதையால் திறந்தது பாதை (A9)


இன்று நள்ளிரவு முதல் ஏ9 ஊடாக வீதித் தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். இதன்படி இன்று நள்ளிரவு முதல் சகல வாகனங்களும் பொதுமக்களும் எவ்வித அனுமதியும் பெறாமல் 24 மணி நேரமும் ஏ9 வீதியூடாக பயணங்களை மேற்கொள்ளலாம் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 10 திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது உயர்பாதுகாப்புவலய நீக்குதல்கள் பற்றிய அறிவித்தலையும் வெளியிடுவார் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Jan 2, 2010

தனிமை