Dec 31, 2009

அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் மாரடைப்பால் காலமானார்.



சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 52 ஆகும்.

இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அங்கு அவர் உயிர்பிரி;ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர்,பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவராவார்.

1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த சந்திரசேகரன், முதன்முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார்.

இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த சமாதான நீதிவான் பதவியே அவரை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகிய அவர் மலையக மக்கள் முன்னணியை தோற்றுவித்து, புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

இதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவரின் ஆசனம் மூலமே 2001 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிவந்த அவர், தற்போது அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து வந்தார்.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சந்திரசேகரன் உலகளாவிய ரீதியில் தமிழ் தலைவராக மதிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பிரதிநிதியாகவும் செயற்பட்டு வந்தார்.மலையகத்தில் தனி அலகு கொள்கையை இவரின் கட்சி கொண்டிருந்ததுடன் மலையகத்தின் பிரச்சினைகளை வெளயுலகிற்கும் கொண்டு சென்றது

புன்னகை பூத்திடட்டும் புதுயுகம் படைத்திடட்டும்

அன்னைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Dec 30, 2009

தேர்தல் நாடகத்தில் நகைச்சுவை கட்டங்கள் - மாறி மாறி நஷ்டஈடு


முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொட, எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார்.
ஜெனரல் பொன்சேகா, கடந்த 24ம் திகதி தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக அட்மிரால் கரன்னாகொட குறிப்பிட்டுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதியின் சார்பில் சட்டத்தரணி அதுல பிரியதர்சன டி சில்வாவின் ஊடாக ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த செவ்வியின் ஊடாக அட்மிரால் கரன்னாகொடவிற்கு, அவப்பெயர் ஏற்படுத்த ஜெனரல் பொன்சேகா முயற்சித்துள்ளார் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த நட்ட ஈட்டுப் பணத்தை 14 தினங்களுக்குள் கொடுக்கத் தவறும் பட்சத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dec 29, 2009

சுரண்ட நினைத்து... புரண்டு போன அரசு!!!!!!!!!

எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக ஸ்லின் 143 இசட் விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக நம்பத்தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்திற்கான உரிமை மற்றும் பொறுப்பு என்பவற்றை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது போனதால் அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். எரித்திரியாவில் 10 விமானங்கள் இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்ற விமானப் படை மற்றும் அரச அதிகாரிகள் எரித்திரிய விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் மாத்திரம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு விமானங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எரித்திரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானங்களின் உரிமை மற்றும் பொறுப்பாளிகள் யார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவற்றை விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்ல அனுமதித்ததாக அந்த விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையச் சொன்னா வழக்கு, பொய்ய சொன்ன துவக்கு!!!!


சண்டேலீடர் பத்திரிகைக்கு ஜெனரல் சரத் பொன்சேக்கா வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்து திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டமை சம்பந்தமாக 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அவர் சண்டேலீடர் ஆசிரியர் பெட்ரிக்கா ஜயன்ஸூக்கு தனது சட்டத்தரணி ஊடாக நேற்று அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளார்.
தான் தெரிவித்த கருத்துக்களைத் திரிபுபடுத்தியமை தொடர்பாக சட்டத்தரணி அறிவித்தலை அனுப்பியுள்ள சரத் பொன்சேக்கா 38 வருடகாலமாக இராணுவத்தில் பணியாற்றி ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை 14 நாட்களுக்குள் சரிசெய்யுமாறும் அப்படியில்லை எனில் தமக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக சண்டேலீடர் பத்திரிகை 500 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இவை நிறைவேற்றப்படாவிட்டால், தான் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கப் போவதாகவும் சரத் பொன்சேக்கா கூறியுள்ளார்

மாயமாய் மறையும் மனிதர்கள், மகுடம் சூடிய மந்திரவாதி யாரோ? வெள்ளைவான்


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பாஸ்போட் எடுக்க வந்த, யாழ்ப்பாணம் கொட்டடியை சேர்ந்த 21 வயதான செல்வக்குமார் என்ற இளைஞர் காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 14ம் திகதி ஏ9 வீதியூடாக வவுனியா பயணித்த இவர், வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு யாழ்தேவி மூலம் பயணம் மேற்கொண்டார் எனவும் மேலும் இவரை அழைத்து போக கொழும்பு புகையிரத நிலையத்தில் காத்திருந்தவர், அவரை பல மணி நேரம் காத்திருந்தும் கண்டுகொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளனர்.


குறித்த நபர் உணவு விடுதியில் வேலை செய்து வந்தவர் எனவும் , வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்காக பாஸ்போட் எடுக்க கொழும்பு பயணித்தார் எனவும் குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Dec 28, 2009

சிறகொடிந்த சிவாஜிலிங்கம் சிக்கலில் சிக்கிக் கொண்டார்


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இனி இந்தியாவுக்கு செல்லமுடியாதவாறு அவரது விசா அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. சிவாஜிலிங்கம் அண்மையில் டுபாயில் இருந்து சென்னை வந்த வேளையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் இந்திய மத்திய அரசாங்கத்தின் சிறப்பு கட்டளையின் அடிப்படையிலேயே நாடுகடத்தப்பட்டதாகவும் அவருக்கான விசா அனுமதி தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் அவர் வாடிக்கையாக சென்னைக்கு சென்று வந்துக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டங்களில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயங்களில் தமது பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி அவருக்கு அங்கிருக்க அனுமதிவழங்கப்பட்டது.

எனினும் தற்போது அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்ற நிலையிலேயே அவர் இந்தியாவுக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு அறிக்கை ஒன்று அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dec 24, 2009

இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கனும் நொந்த மனச தேத்திக்கனும்

4-வது ஒரு நாள் போட்டிக்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தாவில் உள்ள நைட் கிளப்பிற்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இலங்கை வீரர்களில் 7 பேர் போலீசுக்கு தெரிவிக்காமல் எந்த பாதுகாப்பும் இன்றி நள்ளிரவு 11 மணி அளவில் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து வெளியில் சென்றனர். இதில் 5 வீரர்கள் மட்டும் ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பி விட்டனர். ஆனால் சீனியர் வீரர் ஜெயசூர்யாவும், நட்சத்திர வீரர் தில்ஷனும் நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு திரும்பவில்லை. அவர்கள் கிளப்பில் உள்ள பாரில் நன்றாக மது அருந்தி விட்டு கும்மாளமிட்டுள்ளனர். இளம் பெண் ஒருவருடன் உற்சாகமாக டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.

இந்த காட்சியை உள்ளூர் போட்டோகிராபர் ஒருவர் படம் பிடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்து விட்ட தில்ஷன் கோபத்துடன் அவரை நோக்கி வந்தார். `நான் யார் தெரியுமா? எப்படி நீ போட்டோ எடுக்கலாம்’ என்று அவரை திட்டினார். எடுக்கப்பட்ட படங்களை உடனடியாக அழிக்காவிட்டால் இங்கிருந்து போக முடியாது என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த போட்டோகிராபர் படங்களை அழித்து விட்டார். இருப்பினும் தில்ஷன் கவனிப்பதற்கு முன்பாக ஒரே ஒரு போட்டோவை மட்டும் அவர் ரகசியமாக `சேவ்` செய்து இருந்தார். அந்த போட்டோ இப்போது வெளியாகி இருக்கிறது.

அதிகாலை 2 மணி வரை கிளப்பில் ஜாலியாக நேரத்தை செலவிட்ட தில்ஷனும், ஜெயசூர்யாவும் 4-வது ஒரு நாள் போட்டியில் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dec 23, 2009

சோதனை மேல் சோதனை போதுமட சாமி - யாழ் மக்கள் அவலம்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் பணப்பறிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தி கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீண்டும் விடுவிப்பதாகக் கூறியே இந்தப் பணப்பறிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்தி கிராமசேவர்களிடம் காணமல் போனவர்களிடன் உறவினர்களின் விபரங்களையும், தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு பெறப்படும் தொலைபேசி இலங்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி காணாமல் போனவரை விடுவிப்பதானால் குறிப்பிட்ட வங்கி இலக்கத்திற்கு சென்ற அவர்களால் தீர்மானிக்கப்படும் பணத்தினை வைப்பிலிடுமாறு கூறுகின்றனர். இவ்வாறு வங்கியில் பணத்தினை வைப்புச் செய்தும் பல இடங்களுக்கு உறவினர்கள் அலக்களிக்கப்பட்டும் காணாமல் போனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதனை அறிந்த உறவினர்கள் படை முகாங்களிலும் , காவல்நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இங்கு குறிப்பிட்டது போன்று, புலம் பெயர் நாட்டில் வதிக்கும் 55 அகவை மதிக்கத்தக்க ஒருவர் தனது மகனின் விடுதலைக்காக 20 இலட்சம் இலங்கை ரூபாக்களை வட்டிக்கு எடுத்து வழங்கிய போதும், அவரின் மகன் விடுதலை செய்யப்படவில்லை. குறித்த கும்பலால் தொடர்புக்காக வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கமும் வேலைசெய்யவில்லை என ஏமாந்தவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐந்தில் வளையாதது அறுபதில் வளைந்து கின்னஸ் சாதனை


அமிதாப் பச்சன் 12 வயது சிறுவனாக நடித்த பா திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பா படம் வெளியாவதற்கு முன்பே, அந்தப் படத்தில் அமிதாப்பின் பாத்திரம் நிச்சயம் ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளையும், பெருமைகளையும் பெறும் என்று பலரும் கூறினர்.

இப்போது அது நிரூபணமாகி வருகிறது. வசூலில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ள பா, இப்போது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறுகிறது. 67 வயதில் நடிகர் ஒருவர் 12 வயது சிறுவனாக நடித்தது உலகிலேயே இதுதான் முதல்முறை என்பதால் அமிதாப் பச்சனுக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது.

குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் - கணனிக்கல்வி


கணனியில் சின்னதாய் எது வித பாதிப்பும் இல்லாத ஒரு வைரஸ் பற்றி மீடியா வண் உங்களுக்கு சொல்லித்தரப் போகிறது. இந்த வைரஸை உருவாக்க கணனியில் அடிப்படை அறிவு மாத்திரம் இருந்தால் போதும். மேலும் இந்த வைரஸை பற்றி கற்கமுன் நாங்கள் வைரஸ் என்றால் என்ன என்றுவென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

வைரஸை செய்பவர்கள் யார்? , எதற்காக இதனை செய்ய வேண்டும்? ,இதனால் அவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?

இந்த கேள்விகளை என்றாவது நாம் எமக்குள் கேட்டிருந்தோம் ஆனால் பல உண்மைகள் எமக்கு புலப்பட்டடிருக்கும். இந்த வைரஸை செய்பவர்கள் யார் என்று பார்போமாக இருந்தால், வைரஸை தடுக்கும் மென்பொருட்கள் உருவாக்கும் அதே நிறுவனங்கள் தான் இந்த வைரஸையும் உருவாக்குகின்றன. இந்த வைரஸை எதற்காக செய்ய வேண்டும் என்று பார்த்தால் , இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் கணனி இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம் அவ்வாறு இருக்க இந்த கணனிக்கு ஏதாவது ஒரு இடையூரை விளைவித்து பணம் சம்பாதிக்கும் ஒரு திட்டம் தான் இது. இதனால் என்ன பலன் அவர்களுக்கு கிடைகும் என்று பார்த்தால், இந்த வைரஸை உருவாக்கும் நபர்களிடம் இருந்து அந்த வைரஸையும் அதற்கான தீர்வையும் , வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கும். சிலவேளைகளில் ஏலம் கூட விடப்படும். ஆகவே வைரஸ் என்றால் கணனிக்கு தடைகளை ஏற்படுத்த கூடிய விடயம் என்று சகலரும் இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். இப்பொது புரிகிறதா ஏன் வாலிபர்களது மனதில் கணனி பொறியியலாளர் ஆகவேண்டும் என்ற கனவு இருகிறதென்று.

சரி இப்போது நாங்கள் வைரஸ் செய்ய தொடங்கலாம். கவலை படத்தேவை இல்லை இந்த வைரஸை செய்ய எதுவித கண்னி மென்பொருட்களின் மொழிகளும் தேவையில்லை.

படி நிலை 1 :- உங்கள் விசைபலகையில் உள்ள print screen என்ற buttonஜ அழுத்தவும்.

படி நிலை 2 :- ms paintஜ open செய்து அங்கே edit சென்று paste செய்யவும்.

படி நிலை 3 :- பின் அதை புகைபட கட்டமைபில் (jpeg) பதிவு(save) செய்து கொள்ளவும்.

படி நிலை 4 :- தொடர்ந்து பதிவு செய்த புகைபடத்தை உங்கள் கணனியின் முகப்பு படமாக மாற்றுக ( propeties --> desktop--> browse--> பதிவு (save) செய்த படம் .

படி நிலை 5 :- அதன்பின் முகப்பு பகுதியில் மெளசை right click செய்யவும் அதில் தோன்றும் மெனுவில் arrenge icon typeக்கு சென்று show desktop என்ற optionஜ deselect செய்யவும்.

படி நிலை 6 :- start button மீது ridgt click செய்து propeties என்ற optionaஜ தெரிவுசெய்யவும் அதன்பின் taskbar tabஜ தெரிவுசெய்து அதில் auto hide taskbar என்ற optionஜ தெரிவுசெய்யுங்கள் இப்பொது உங்கள் task bar மறைந்து படமாய் தோன்றும்.

இப்பொது உங்கள் முகப்பு பகுதியில் தெரிவது வெறும் புகை படமே தவிர எந்த ஒரு iconஉம் அல்ல யார் double click செய்தாலும் எதுகும் open ஆகாது.

மீழ்வதற்கு (படி நிலை 4) முகப்பு புகைப்படத்தை மாற்றிவிட்டு படி நிலை 5ல் deselcet செய்த optionஜ select செய்யுங்கள்

media One :- Raveendran Tharsan ( Promotion Manager ,Journalist & HND IT Student)

வானை எட்டி பிடிக்கும் 4ஜி

தற்போது அறிமுகமாகியுள்ள "3 ஜி' மொபைல் தொழில் நுட்பத்தை விட, 40 மடங்கு வேகமான "4 ஜி' தொழில் நுட்பம் விரைவில் வெளிவரவுள்ளதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த சாப்ட்வேர் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் புதுமை' பற்றிய தேசிய கருத்தரங்கம், பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் நடந்தது. ஆஸ்திரேலியா, "பிரவாகனா சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் பாலகிஷனானே, கம்ப்யூட்டர் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்கள் பற்றி விளக்கினார்.


அவர் பேசுகையில், ""இன்றைய கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் படுவேகமான உலகுக்கு அனைவரையும் அழைத்துச் செல்கிறது. தற்போது அறிமுகமாகியுள்ள "3 ஜி' மொபைல் தொழில் நுட்பம், இன்டர்நெட் தொழில் நுட்பத்தை விட படுவேகமானது.

இதற்கு அடுத்தபடியாக, "4 ஜி' தொழில் நுட்பம் வரவிருக்கிறது. 4 ஜி தொழில் நுட்பம், 3 ஜி தொழில் நுட்பத்தை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்தது.

சாதாரண பிராட் பேண்ட் தொழில் நுட்பத்தை விட 20 - 40 மடங்கு வேகமானது. இத்தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன,'' என்றார்.

கப்பலை திசை திருப்ப வாயினால் காற்றூதும் அரசு


அவுஸ்திரேலியாவிற்கு அகதி அந்தஸ்து கோரி சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்களுள் 3 விடுதலை புலி உறுப்பினர்களும் அடங்குவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள் அவுஸ்திரேலிய அகதி அந்தஸ்து கோரும் ஏனைய 255 பேரினது அகத் அந்தஸ்து கோரிக்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெகார்த்தாவிலுள்ள இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் இவர்களை அடையாளம் கண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவர் சேனக வல்கம்பாய 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளார்.விடுதலை புலிகள் தொடர்பாக கிடைத்த புகைப்படங்களின் அடைப்படையில் இவ் முன்னாள் போராளிகள் இனங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள இவ்வறிப்பை அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மறுத்துள்ளதுடன், அவுஸ்திரேலியா விடுதலை புலிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Dec 21, 2009

போராட்டம் முடிந்ததால் பேராட்டம் போடும் பெரும்பான்மை சூதாட்டம்
































இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய ஆயுத விநியோகிக் கப்பலான பென்சூன் என்ற பிரின்ஸ் கிறிஸ்டினா, தென் கிழக்கு ஆசிய கடல் பகுதியிலிருந்து நேற்று மதியம் 12.42க்கு கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட இந்தக் கப்பலை கடற்படைத்; தளபதி திசர சமரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இது இலங்கைக்குக் கிடைத்த மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பமாகும்.

புலிகளின் கப்பல் வலையமைப்பை எம்மால் வீழ்த்த முடிந்ததை இந்தக் கப்பல் கொண்டுவரப்பட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி
தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலின் களஞ்சியத்தில் உலங்குவானூர்த்தியொன்றை இறக்குவதற்கான வசதிகள் காணப்படுகின்றன. இந்தக் கப்பலில் இருந்து உலங்குவானூர்த்தியொன்றை அனுப்பி அதை வன்னியில் தரையிறக்கி, புலிகளின் தலைவர்களை அழைத்துச் செல்லும் திட்டங்கள் காணப்பட்டதாகவும் கடற்படையினர் முழுமையாக கடற்பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் இந்தத் திட்டம் ஈடேறவில்லை எனவும் திசர சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். 8,300 தொன் எடைகொண்ட இந்தக் கப்பலில் இன்மார்செட் என்ற செய்மதி தொலைபேசி கட்டமைப்பும் காணப்படுகிறது. பிரின்ஸ் கிறிஸ்டினா என்ற இந்தக் கப்பலை கப்டன் தசநாயக்க தலைமையிலான குழுவினரே இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரும், வெளிநாடொன்றின் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இந்தக் கப்பல் உள்ளிட்ட புலிகளின் மூன்று கப்பல்களை இலங்கை அரசாங்கத்தினால் கைப்பற்ற முடிந்துள்ளது. மீதமுள்ள இரண்டு கப்பல்கள், அடுத்த மாதத்திற்குள் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார். இந்தக் கப்பல் இலங்கைக் கடற்படையினரின் மற்றுமொரு கப்பலாக பயன்படுத்தப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பாட்டு பாட நான் தாயாராக இல்லை ஆஷா


ஜனாதிபதிக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு இந்திய பாடகி ஆசா போஸ்லேவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஆசா போஸ்லே இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இலங்கையின் இசையமைப்பாளர்கள் பாத்திய மற்றும் சந்தோஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில் ஆசா போஸ்லே இலங்கை வந்திருந்தார். இதன் போது அவருடன் சந்திப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி தமக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுமாறு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு நேரடியாக மறுப்பு தெரிவித்த ஆசா போஸ்லே, இவ்வாறான செயல்கள் தமக்கு அபக்கீர்த்தியை ஏற்படுத்தும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதிக்கும் ஆசா போஸ்லேக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு காட்சிகளை அரசாங்க பிரசார ஊடகமாக ரூபாவாஹினி மற்றும் நேத்ரா அலைவரிசை என்பன திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்தன.

இதற்கும் ஆசா போஸ்லே தமது அதிருப்தியை வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Dec 19, 2009

சிக்ஸ்(6) அடிச்சாலும் சரியான நேரத்துக்கு அடிக்கனும்


இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனிக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை - இந்திய அணிகளுக்கிடையே நாக்பூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பந்து வீச்சில் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெறும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மட்டுமே டோனி விளையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வாய்மூலமாக இந்த விடயம் குறித்து அவருக்கு அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ கடிதம் இன்னமும் டோனிக்குக் கிடைக்கப் பெறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நடைபெற்ற போட்டியில் சுமார் 45 நிமிட நேரத்தை இந்திய அணியினர் மேலதிகமாக எடுத்துக் கொண்டுள்ளனர். தோல்வியைத் தழுவியது இந்தியா இந்திய இலங்கை அணிகளுக்கிடையில் நாக்பூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது

கரம் முளைத்த மாதா புகைப்படம்


ஆனைக்கோட்டை வராளி கோவிலடி அருகிலுள்ள வீடு ஒன்றில், அன்னை மரியின் படத்திலிருந்து கைகள் தெரியும் அதிசயம் நடந்துள்ளது. ஆனைக்கோட்டை வராளி கோவிலடி வீடு ஒன்றில் அன்னை மரியின் படம் வைத்து வழிபட்டு வந்தனர். நேற்றிரவு இந்தப் படத்தில் இரண்டு கரங்கள் மாதாவைத் தாங்கியபடி நிற்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த அற்புதத்தைக் காண்பதற்காக பலர் அவ்வீட்டுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதற்கு முன்னரும் பருத்தித்துறையில் இரு இடங்களில் மாதாவின் படத்தில் அதிசயமாகக் கரங்கள் தெரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dec 17, 2009

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே......


தேர்தல் ஆணையாளருக்கென ஒரு அங்கீகாரம் உண்டு. இந்த இரு படங்களிலும் நாட்டில் நடைமுறையில் இருக்கும் அரசியல் இராஜதந்திரங்களை புரிந்துகொள்ள முடிகிறது. தேர்தல் ஆணையாளருக்கு அனைத்து வேட்பாளர்களுமே ஒன்றே ஆனால் மகிந்த ராஜபக்சவும் , சரத் பொன்ஷேகாவும் படத்தில் இருக்கும் இடங்களை பார்க்கும் போது - யாருக்கு தேர்தல் ஆணையாளருடன் அதிக தொடர்பு என்று தெரியும். சில நேரங்களில் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையாளருக்கு இப்போதே தெரிந்து கூட இருக்கலாம். எந்த பொந்தில் எந்த பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும்?

Dec 15, 2009

குற்றம் உள்ள நெஞ்சம் ............. தாம்

குறுகிய அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

துணிச்சல் மிக்க இராணுவப் படைவீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான மீட்புப் பணிகளை அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் காட்டிக் கொடுக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

படைவீரர்களுக்கு அவமரியாதை ஏற்படும் வகையிலான சதித் திட்டங்களுக்கு தாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார நெருக்கடி காலத்திலும் நாட்டு மக்களின் தொழில் வாய்ப்புக்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dec 14, 2009

ஆயதங்கள் மீட்பு

யாழ் பெனிசுல பகுதியில் ஆயதங்கள் மீட்கப்பட்ட ஆயதங்களை படத்தில் காணலாம்...........

விபச்சார வழக்கு + அரசியல் குதிப்பு = நடிகை புவனேஸ்வரி


விபச்சார வழக்கில் கைதாகி வெளிவந்துள்ள நடிகை புவனேஸ்வரி சமீபத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தில் இணைந்தார். அவருக்கு மாநில மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையொட்டி தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு 11.12.2009 அன்று வந்த நடிகை புவனேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபொழுது பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.


அப்போது அவர் கூறியதாவது:-

"3வருடத்துக்கு முன்பே நான் இந்த கட்சியில் சேர்ந்து இருக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரவில்லை. இப்போது அரசியலில் சேரும் நேரம் வந்ததால் இணைந்து உள்ளேன். மூவேந்தர் முன்னணி கழகம் நான் சார்ந்த சமுதாய கட்சியாகும். டாக்டர் சேதுராமன் எனக்கு இந்த பொறுப்பை வழங்கியதால் கட்சி பணியில் தீவிரமாக செயல்படுவேன். கடந்த கால சம்பவம் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது விதியின் விளையாட்டு. போலீசார் எனக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்தார்கள். அதை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன். என் மீது போடப்பட்ட வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என நிரூபிப்பேன். நான் கைது செய்யப்பட்டபோது வாக்குமூலம் எதுவும் கொடுக்கவில்லை. நான் சொன்னதாக வந்த அனைத்து தகவல்களும் தவறானது. நான் வாக்குமூலம் கொடுக்க வில்லை என்று போலீஸ் கமிஷனரே கூறி இருந்தார். நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை நேற்று சந்தித்து இது தொடர்பாக விளக்கம் தெரிவித்தேன். எனது விளக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டார். எந்த நடிகர்-நடிகை பற்றியும் நான் போலீசில் எதுவும் சொல்லவில்லை. எங்கேயோ ஏற்றிவிட்ட புகை எங்கோ எரிந்துவிட்டது. பத்திரிக்கையாளர்கள் எனது நண்பர்கள். பத்திரிக்கையாளர்களை பற்றி நான் எதுவும் தவறாக எங்கும் பேசுவது கிடையாது. யாரோ சிலர் பேசினார்கள் என்றால் அது அவர்களுக்குள் விஷயமாகும். என் மீதான வழக்கு கோர்ட்டில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை. பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று மட்டும் கூறமுடியும். நடிப்பு என் மூச்சு அதை நிறுத்த மாட்டேன். தற்போது அரசியலிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் இங்கும் பிரகாசிப்பேன். பெண்களுக்கு எதிராக அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுப்பேன். எதிர் காலத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்ய வில்லை.கட்சி தலைமை முடிவுப்படி செயல்படுவேன். திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு இப்போது செல்ல முடியவில்லை. விரைவில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் பொதுச்செயலாளர் இசக்கிமுத்து உடன் இருந்தார்".

பொம்மைக்குள் புதைந்து போன உண்மை

குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகளை சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த மாத இறுதியில் சீனாவில் இருந்து 2 கன்டெய்னர்களில் பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், அவற்றின் விவரங்கள் முறையாக குறிப்பிடப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுங்க இலாகா துறை கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள், அந்த கன்டெய்னர்களில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள சீன பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்பிரேக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவற்றை பரிசோதனை செய்த போது, பொம்மைகள் தரம் குறைந்ததாகவும், உற்பத்தியாளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடாமல் இருந்ததும் தெரிந்தது. மேலும், பொம்மைகளில் காரீயம் எனும் ரசாயனம் கலந்த பெயின்ட்டுகள் பளிச்சிடும் வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பதும், இத்தகைய பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடினால், நுரையீரல் தொடர்பான நோய்கள் உண்டாகும் என்பதும் தெரிய வந்தது.
மேலும், இறக்குமதி செய்த நிறுவனம் அளித்த தரச் சான்றிதழ்களுக்கும், பொருட்களுக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. இதையடுத்து, சீன தயாரிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Dec 11, 2009

இன்றைய உதயம்


11.12.2009 விரோதிவருடம் கார்த்திகை மாதம் 25ஆம் நாள் வெள்ளிக்கிழமை

ந்ட்ச்சத்திரம்-அத்தம்
சுபநேரம் - 6.19 - 7.49
இராகுகாலம்- 10.49 - 12.19


மேடம் - யோகம்
ரிஷபம் - சிரமம்
மிகுனம் - துடிவு
கடகம் - ஆர்வம்
சிம்மம் - ந்ற்ரெய்தி
கன்னி - வெற்றி
துலாம் - இலாபம்
விருச்சியம் - நிம்மதி
தனுசு - புகழ்
மகரம் - போட்டி
கும்பம் - பொருமை
மீனம் - ஒய்வு


பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அன்பின் வரலாறு ஆகும்

மகாகவி பாரதி பிற்ந்த தினம்

Dec 9, 2009

இன்றைய உதயம்



10.12.2009 விரோதிவருடம் கார்த்திகை மாதம் 24ஆம் நாள் வியாழக்கிழமை


நட்ச்த்திரம்-உத்தரம்
சுப நேரம்- 7.49- 9.19
இராகு காலம்- 1.49 - 3.19


மேடம்-உற்சாகம்
ரிஷபம்-இன்சொல்
மிதுனம் - புகழ்
கடகம் -ஆதரவு
சிம்மம் ஸலனம்
கன்னி -கவலை
துலாம் -பக்க்தி
விருச்சியம் -ஆர்வம்
த்னுசு -களிப்பு
மகரம் -ஜெயம்
கும்பம் -உதவி
மீனம் -தாமதம்

அதிஸ்ட எண்கள்:- 3,7
அதிஸ்ட வர்ணங்கள்:- கருப்பு ,வெள்ளை

முட்டாளின் முழு வாழ்கையும் அறிவாலியின் ஒரு நாள் வாழ்கைகு சமம்

Dec 8, 2009

இன்றைய உதயம்


09.12.2009 விரோதி வருடம் கார்த்திகை மாதம்23ஆம் நாள் புதன் கிழமை

நட்சத்திரம் - பூரம்
சுபநேரம் - 4.48-6.18
இராகுகாலம் - 12.48-1.48

மேடம்- பேராசை
ரிஷபம்-பொறுமை
மிதுனம்-தோல்வி
கடகம் -இலாபம்
சிம்மம் -நன்மை
கன்னி -உய்ர்வு
துலாம் -பயம்
விருச்சியம் -தேர்ச்சி
தனுசு -கவலை
மகரம் -நட்பு
கும்பம் -அலைச்சல்
மீனம் -நிம்மதி

அதிஸ்ட எண்கள்:- 5,9
பொருந்தா எண்கள்:-2,8
அதிஸ்ட வர்ண்ம் - நீலம்

கடவுளை உறுதியாக நம்பிவிட்டவனை எவராலும் கெடுக்க முடியாது.

இன்று மூத்த அறிஞர் ராஜாஜி பிறந்த தினம்

5 ரூபாவை 225 பேர் திருடினால் தப்பா?


விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் கப்பல்கள், வங்கி கணக்குகள் உட்பட அவர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்ததும் அவை பற்றிய முழுமையான விபரங்கள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. விடுத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2008 மே 18ஆம் திகதிக்கு பின்னர் புலிகளிடமிருந்த சொத்துக்கள், தங்கம் தொடர்பான விபரங்களை புலனாய்வு பிரிவினர் திரட்டினர். தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கே.பி.யின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கப்பல்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டன. அதில் சிலவற்றை எமது கடற்படையினர் அழித்தொழித்துள்ளனர்.

புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள், எமது நாட்டின் சொத்துக்கள், மக்களின் சொத்து, அவை நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும்.

புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள தகவல்களை வெளியிட்டால் அது எதிர்கால விசாரணைக்கு இடையூறாக இருக்கும். விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்ததன் பின்னர் தகவல்களை பாராளுமன்றத்திற்கு தருகின்றோம் என்றார். முன்னதாக கேள்வி எழுப்பிய ஜோசப் மைக்கல் பெரேரா,விடுதலைப் புலிகளின் தலைவர் கடந்த மே 18ஆம் திகதி கொல்லப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் கைப்பற்றப்ப்டுள்ளன. பாரிய தொகை தங்கம் நவம்பர் 26ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி கே.பி. கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது புலிகளுக்கு சொந்தமான பணம் மற்றும் ஏனைய சொத்துககள் தொடர்பான சகல தகவல்களையும் விசாரணைகளின் போது வெளிப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான தகவல்களையும் புலிகளின் சொத்துக்களையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

Dec 7, 2009

100 ஆயுதப்புலிகள் கல்விபுலிகளாய்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 100 முன்னாள் உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் வழிகாட்டல்களின் காரணமாக குறித்த நபர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 100 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் தமது கல்வியை இவர்கள் தொடர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற சில விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு அராசங்கம் அதிக முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கத்தி முனையில் கொள்ளை. தெஹிவளையில் சம்பவம்.

தெஹிவளை பகுதியில் இளம் குடும்பப்பெண்ணின் தாலி கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று(07.12.2009) மாலை 7.30 மணியளவில் இந்த வன்முறை இடம்பெற்றுள்ளது.
தனது தோழியை வழியனுப்ப வந்த யுவதிடமே இவ்வழிப்பறி இடம்பெற்றுள்ளது. சுமார் 440,000 ரூபா பெறுமதியுடைய தாலிக் கொடியே இவ்வாறு கொள்ளையிட்டுள்ளது.
வழிப்பறியை நிகழ்த்திய இரு ஆண்களில் ஒருவர் கத்திமுனையில் யுவதியை மிரட்டியபோது மற்றைய நபர் அப்பெண்ணை தார்ப்பாதையில் சுமார் 5 மீட்டர் தூரம் வரை இழுத்துச்சென்று தாலியை பறித்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற பாதை நெரிசல் மிக்கதாக இருந்த போதும் எவரும் உதவ முன்வரவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதென்ற பழமொழியை முதலில் ஒழிக்க வேண்டும். ஆனால் இன்னும் வேடிக்கை பார்ப்பதை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை இந்த மக்கள்.



மீடியா வன் நிருபர் : துஷி

Dec 6, 2009

இது கடத்தல் அல்ல ....அழித்தல்......

காலி, கலுவெள்ள பகுதியில் அமைந்துள்ள சிவாலயத்தில் இருந்த பிரதான சிவ விக்கிரகமொன்று இனந்தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விக்கிரகம் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது எனவும், ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பெறுமதியானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஆலயத்தில் கும்பாபிஷகத்திற்கான புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.கோயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நபரைத் தாக்கிவிட்டு குறித்த கொள்ளையர்கள் இந்த விக்கிரகத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

கொடுமையிலும் கொடுமை ; அன்றய ஆரம்பம் மீண்டும்

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் ஒரு பிள்ளையின் தாயார் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளம் தாயான இவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்னர், கொலைசெய்து புதைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் யாரால் கொலை செய்யப்பட்டார் எப்போது இச் சம்பவம் நடைபெற்றது என்ற விபரங்களைச் சரிவரப் பெற முடியவில்லை.

கொலை செய்யப்பட்டவர் 36 வயதுடைய செல்வபாமா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அராலியில் உள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பூத உடலை அவர் குடும்பத்திடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

செல்வபாமாவின் உடலை அவரது மகள் அடையாளம் காட்டியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இவ் உத்தரவைப் பிறப்பித்ததாகவும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்

Dec 2, 2009

அடைக்கல அகதிகள் அரவனைக்க அழைப்பு



இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் அனைவரும் அடுத்த இரு மாதங்களுக்கு இடையில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு சென்னையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

புலிகள் கடந்த மே மாதம் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு இலங்கையில் இயல்பு நிலையும், சுமுகமான சூழலும் தற்போது ஏற்பட்டுள்ளன.

கடந்தகால யுத்தத்தால் சுமார் ஒரு இலட்சத்து 23 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அவர்களின் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ் நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் எதிர்வரும் இரு மாதங்களுக்கு இடையில் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்.