May 20, 2010

மலிந்தால் சந்தைக்கு வந்து தானே ஆகனும்

இதுவரை கவர்ச்சி க்கு ஓட்டுப் போடாமல் இருந்து வந்த பாவனா இப்போது கவர்ச்சிக் கட்சிக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம்.

அசல் படத்துக்குப் பின்னர் தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தார் பாவனா. இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை.இதனால் சற்றே சோர்ந்து போய்விட்டாராம்.

வாய்ப்புகள் வராமல் போனதற்கு பாவனாவும் கூட ஒரு காரணம். முன்னணி நடிகர்களோடு மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்பதை ஒரு பாலிசியாகவை வைத்துள்ளதால் பீல்டில் படு ஹாட்டாக இருக்கும் பிற இளம் நாயகர்கள் பாவனாவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

இதனால் வருத்தம் அடைந்திருந்த பாவனா, இந்த பட வாய்ப்புப் பஞ்சத்தைப் போக்க கவர்ச்சி கோதாவில் குதிக்கத் தயாராகி விட்டார். இதற்காக கவர்ச்சிகரமான போஸ்களுடன் புதிய ஆல்பத்தை கோலிவுட்டில் ரவுண்டு அடிக்க விட்டுள்ளாராம்.

கிளாமர் களத்தில் குதித்து கோலிவுட்டில் தன்னை ஆணித்தரமாக நிரூபிக்க முடிவு செய்துள்ள பாவனா, சைடில், விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளாராம்.

சினேகாவைப் போல திரைப்படங்களோடு விளம்பரங்களிலும் விறுவிறுப்பாக நடிக்கப் போகிறாராம்.


தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு: சீமான்

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தனி ஈழம்தான் சரியான தீர்வு. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை இனப்படுகொலை அரசாக அறிவித்து, தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் மாநாடு மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் பேசியதாவது:

இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டபோது, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதை தட்டிக் கேட்கவில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எங்களிடம் தமிழுணர்வு செத்துப்போகவில்லை என்பதைக் காட்டுவதற்காகவே, இந்த மாநாடு நடைபெறுகிறது. உயிரைவிட மேலானதாக மொழியையும் இனத்தையும் நேசிக்கிறோம். உலகின் கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்த ஆட்சியாளர்களை நாம் அதிகாரத்திலிருந்து இறக்க வேண்டும்.

தற்போது, ஜனநாயக அரசியலை படுகொலை செய்யும் வகையில் பணநாயக அரசியல் உள்ளது. பணம் கொடுத்து வாக்குரிமையை விலைக்கு வாங்குவதை, நாம் தடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி படித்தவர்கள் அரசியலுக்கு வருவதுதான். அரசியல் சாக்கடை என ஒதுங்கிவிடக் கூடாது. படித்தவர்கள் அரசியலுக்கு வராதவரை இந்த அவலநிலை நீடிக்கும் என்றார் சீமான்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் பயங்கரவாதச் செயல்களுக்கு துணைபோவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களைக் கலைத்து விட்டு, அனைத்து ஈழத்தமிழர்களும் சுதந்திரமாக வாழ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறையில் உள்ள நளினி, குணங்குடி ஹனீபா போன்றவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்களக் கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிய மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுவரை சிங்களக் கடற்படையினரின் தாக்குதலுக்கு 450 தமிழக மீனவர்கள் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலேசியாவில் வாழும் 4.5 லட்சம் தமிழர்களுக்கும், மலேசிய அரசியல் சாசன சட்டத்தின்படி குடியுரிமை வழங்க, இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் காந்திய இயக்கம் தமிழருவி மணியன், மலேசிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, சாகுல் ஹமீது, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டை முன்னிட்டு மலர் வெளியிடப்பட்டது.

மாநாட்டில், தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர் குடும்பத்தினருக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயர் பொறித்த கேடயம், விருதுகள் வழங்கப்பட்டன. தேவநேயப் பாவாணர் குடும்பத்தினருக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது.

முன்னதாக, மாநாட்டையொட்டி தெப்பக்குளத்திலிருந்து மாநாட்டுத் திடல் வரை பேரணி நடைபெற்றது. பேரணியை விரகனூர் சுற்றுச்சாலை அருகே சீமான் பார்வையிட்டார்.

அரசன் அன்று கொல்வானாம் தெய்வம் நின்று கொல்லுமாம்

இலங்கையில் சீரற்ற காலநிலை தொடர்கிறது. இதன் காரணமாக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மழை வெள்ளம் காரணமாக இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு, மாகாண சுகாதாரத் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

வணக்கம்

வணக்கம் media one newa நேயர்களுக்கு
நீண்ட நாட்களின் பின் உங்களை சந்த்திக்க வந்திருக்கின்றோம். இடையில் பல தடங்கள்கள் காரணமாக உங்களுக்கு எம்மால் முடிந்த செய்திகளை வழங்க முடியாமல் போனதற்க்கு மனம் வருந்துகின்றோம்.
எனி வரும் காலங்களில் உங்களுக்கான செய்திகளை எம்மால் முடிந்தவரை விரைவாக வழங்குவோம் என உறுதி அழிக்கின்றோம்.
எமது இந்த வலைப்பதிவில் உடனுக்குடன் செய்திகளை பதிவு செய்வதற்க்கு உங்கள் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றோம் {அதாவது உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை சேகரித்து எமக்கு அனுப்பி வையுங்கள்}
நன்றி
இப்படிக்கு
mediaonenews team