Dec 7, 2009

100 ஆயுதப்புலிகள் கல்விபுலிகளாய்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 100 முன்னாள் உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் வழிகாட்டல்களின் காரணமாக குறித்த நபர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 100 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் தமது கல்வியை இவர்கள் தொடர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற சில விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு அராசங்கம் அதிக முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கத்தி முனையில் கொள்ளை. தெஹிவளையில் சம்பவம்.

தெஹிவளை பகுதியில் இளம் குடும்பப்பெண்ணின் தாலி கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று(07.12.2009) மாலை 7.30 மணியளவில் இந்த வன்முறை இடம்பெற்றுள்ளது.
தனது தோழியை வழியனுப்ப வந்த யுவதிடமே இவ்வழிப்பறி இடம்பெற்றுள்ளது. சுமார் 440,000 ரூபா பெறுமதியுடைய தாலிக் கொடியே இவ்வாறு கொள்ளையிட்டுள்ளது.
வழிப்பறியை நிகழ்த்திய இரு ஆண்களில் ஒருவர் கத்திமுனையில் யுவதியை மிரட்டியபோது மற்றைய நபர் அப்பெண்ணை தார்ப்பாதையில் சுமார் 5 மீட்டர் தூரம் வரை இழுத்துச்சென்று தாலியை பறித்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற பாதை நெரிசல் மிக்கதாக இருந்த போதும் எவரும் உதவ முன்வரவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதென்ற பழமொழியை முதலில் ஒழிக்க வேண்டும். ஆனால் இன்னும் வேடிக்கை பார்ப்பதை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை இந்த மக்கள்.



மீடியா வன் நிருபர் : துஷி