Jan 18, 2010

சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி



கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.

ரிக்டர் அளவு கோலில் 7.3 என்று பதிவான இந்த நில நடுக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிடங்கள் தரைமட்டமாயின. பூகம்பத்தில் சிக்கிய இந்தியர்களின் நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

பல நாடுகளிலிருந்தும் மீட்புப் பணிகளும், உதவிகளும் ஹைட்டி நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன.

சண்டை வந்தால் சட்டை கிழியத்தான் செய்யும்


இறுதிப்போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் உயிரிழந்துள்ளதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று முன்னாள் சனிக்கிழமை மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மகிந்த ராஜபக்ச அரசு போர் வெற்றியினை விற்று அரச தலைவர் தேர்தலில் வெல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நாட்டில் இனமொழி பேதங்களை ஒழித்து மக்கள் அனைவருக்கம் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மக்களது தனித்தன்மையினை பாதுகாக்க தொடர்ந்தும் உழைப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை அரசு தமது சொந்த இலாபத்திற்காகவும் ஆட்சியின் பதவிகளை தக்க வைப்பதற்காகவும் தென்பகுதி சிங்கள மக்களையும் வடபகுதி தமிழ் மக்களையும் ஒருவருக்கெருவர் எதிரிகளாக உருவாக்கும் சதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வன்னியின் இறுதிக்கட்ட போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் முப்பத்தியாறாயிரத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்