
| இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் டேனி ஐபிஎல் போட்டியில் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகி பிரீத்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இணைந்து விட்டார் என்று எண்ணிவிட வேண்டாம் விளம்பரத்தில் மட்டுமே அவர்கள் இருவரும் சேர்ந்து தோன்றவுள்ளனர். இமாமி அழகு சாதன பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் இவர்கள் இருவரையும் தங்களின் புதிய விளம்பரத் தூதர்களாக நியமித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தோனியும் ஜிந்தாவும் கையெழுத்திட்டுள்ளனர் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் விளம்பரம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விரைவில் வெளியாகும் என்று இமாமி நிறுவனம் தெரிவித்துள்ளது. |
