Nov 26, 2009

தமிழனுக்காய் குரல் கொடுத்தால் தண்டனை நிச்சயம்.


தமிழகத்தின் திரைப்படத் தயாரிப்பாளரும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடுதலைப் புலிகளால் வருடாவருடம் நடாத்தப்படும் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொள்ள கனடா சென்ற அவர் நேற்று கனேடிய நேரம் இரவு இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரை பயங்கரவாதம் குறித்து கனடா பின்பற்றும் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக அமைந்தது என்ற வகையில் அவர் கனேடிய காவற்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கனேடிய காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை கனடாவில்; ஒழுங்கு செய்யப்பட்டு இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வில் இன்று இரவும் சீமான் உரையாற்ற இருந்தார் என்றும், நாளை நடைபெறும் நிகழ்விலும் உரையாற்ற இருந்தார் என்றும் கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் கனேடிய அரசாங்கத்திற்கு வழங்கிய அழுத்தம் காரணமாகவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நாளை நடைபெறவுள்ள மாவீரர் தினத்தில் சீமான் ஆற்ற இருந்த உரையை தடுப்பதுவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதற்கான பிரதான காரணம் எனவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது குறித்து கனேடிய அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகவில்லை என்பதுடன் உத்தியோகபூர்வமாக எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை.என்று சில இணையதள செய்திகள் கூறுகின்றது.

Nov 24, 2009

ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானக வளரும் என்று நினைக்கும் அரசு.

அன்மைக்காலங்களில் இலங்கையில் நடைபெறும் பிரச்சினைகள் அனைவரும் அறிந்ததே.... நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தும் கூட, அதை பொ்றுற்படுத்தாது பிரிதொரு நாட்டின் துயர் துடைக்க இலங்கை அரசு உதவி செய்து உள்ளது . தஜிகிஸ்தான் எனும் நாட்டில் ஏற்பட்ட வெள்ளபெருக்குக்காக 25000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையை கையளிப்பதற்காக இலங்கை தூதரகத்தால் விமானபடை தளபதி ஜெயலத் வீரக்கொடி அனுப்பி வைக்கபட்டுள்ளர்.(போர்முடிந்த பின்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் வேலை இதுதானோ).இவர் அந்நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து காசோலையை கையளித்துள்ளார்.
அந்நாட்டு ஜனாதிபதி இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டும் அல்லாது இலங்கையுடன் மேலும் உறவை ஸ்திரபடுத்தி கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (நெருப்பில்லாமல் புகையாதே ஏன் இந்த திடீ்ர் பனி மழை?).

Nov 21, 2009

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி அனைவரையும் பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்படக்கூடிய பொருளாதார வீழ்ச்சி அனைவரது வாழ்க்கையையும் மிக மோசமாக பாதிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த நிலைமை காரணமாக இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்குவதென இந்த நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், எந்தவொரு நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது மிகவும் பாதிப்படையும் நிலையில் உள்ளவர்களே மேலும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்ததாக நிதியத்தின் வெளியுறவுத் திணைக்கள பணிப்பாளர் கரோலின் அற்கின்சன் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். முகாமைப்பணிப்பாளரின் நவம்பர் 5ஆம் திகதிய அறிக்கையில் "மனித உரிமைகள் நிலைமை பற்றிய ஒருவரது அபிப்பிராயம் எப்படி இருந்தாலும்' என்று குறிப்பிடப்பட்டதன் அர்த்தம் சர்வதேச நாணய நிதியம் மனித உரிமை பேணலை கவனத்தில் எடுப்பதில்லை என்பதா? என்று அற்கின்சனிடம் கேட்கப்பட்டது. இந்தக் கூற்று மற்றவர்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறதா? என்பது மற்றுமொரு கேள்வியாகும். முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் மனித உரிமைகள் பேணலின் முக்கியத்துவம் பற்றிய முகாமைப் பணிப்பாளரின் உணர்வையே அவரது கடிதத்தின் உள்ளடக்கம் நேரடியாக எடுத்துக் காட்டுகிறது என்றும் அற்கின்சன் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தற்போது சரியோ பிழையோ எது நடந்தாலும் ஒரு பொருளாதார வீழ்ச்சி அனைவரின் வாழ்க்கையையுமே பாதிக்கும் என்பதே உண்மையாகும் என்று அற்கின்சன் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்.

நலன்புரி நிலையங்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும் : பசில்



புலிகளுடனான போரின் போது அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் ஏற்படுத்தும் முகமாக, எதிர்வரும் டிசம்பர் முதலாந் திகதி அனைத்து நலன்புரி நிலையங்களும் திறந்த முகாம்களாக்க மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

செட்டிக்குளத்திற்கு விஜயம் செய்த பசில் ராஜபக்ஷ அமைச்சர்களான றிசாத் பதியூதீன், பீலிக்ஸ் பெரேரா, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் இராமநாதன் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுடன் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பசில் ராஜபக்ஷ தெரிவிக்கையில்,

"2010 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆந் திகதிக்குள் நடைமுறையிலுள்ள அனைத்து நலன்புரி நிவாரணக் கிராமங்களிலுமுள்ள மக்கள் அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்படுவர்கள். அத்துடன், டிசம்பர் மாதம் முதலாந் திகதி முதல் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக எவ்வித கெடுபிடிகளுமின்றி நடமாடும் வகையில் அவை திறந்த முகாம்களாக மாற்றப்படும்.

தற்போது மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் 25ஆயிரம் ரூபா கொடுப்பனவு 50ஆயிரமாக டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும்.

மேலும் வன்னியிலிருந்து பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு அரசாங்கத்தின் பாதுகாப்பைத் தேடி வந்த மக்களுக்கு எமது ஜனாதிபதி தலமையிலான அரச பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளும் முழுமனதுடன் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதை இவர்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள்.

நிவாரணக் கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80ஆயிரம் மக்களின் தொகை இன்று 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் நேர்மையான தூய்மையான மீள்குடியேற்ற கொள்கையே காரணமாகும்.

அந்த வகையில் கிழக்கு மாகணத்தில் இடம் பெயர்ந்த மக்களை மிகவும் துரிதமாக நாம் மீளகுடியமர்த்தினோம். இன்று பல நாடுகளிலும் அகதி முகாம்கள் பல வருட காலமாக காணப்படுகின்றன. அம்மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் எமது அரசாங்கம் இடம்பெயர்ந்த இம்மக்களது நலனில் அதிகூடிய அக்கறை செலுத்தி உட்கடடமைப்பு வசதிகள் உட்பட ஏனைய தேவைகளையும் பெற்று கொடுத்துள்ளது" என்றார்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனும் உரையாற்றினார்.

கொழும்பில் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது


Nov 19, 2009

ஜோன் ஹோம்ஸ்-தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு



இலங்கைகான மூன்று நாள் வியததை மேற்கொண்டு நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வந்தடைந்த ஐ.நா. வின மனிதாபிமான பணிகளுக்கான உதவி ஆணையாளர் ஜோன் ஹோம்ஸ் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் சுமார் 45 நிமிடங்கள் இடம் பெற்ற இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.ஸ்ரீகாந்தா ,செல்வம் அடைக்கலநாதன் ,பா.அரியநேத்திரன் ,டாக்டர் வில்லியம் தோமஸ் தங்கத்துரை மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் வவுனியாவிலுள்ள இடைத்தங்கல முகாம்களுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாகவும் ,அங்குள்ள நிலமை தொடர்பாகவும் இச் சந்திப்பின் போது விரிவாக எடுத்துக் கூறியதுடன் அங்கு இடம் பெயர்ந்து தங்கியிருக்கும் குடும்பங்களின் துரிதமான மீள் குடியேற்றத்தின் அவசியததை வலியுறுத்தினர்.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறினாலும் வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் தமிழ் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக் கூடிய முழுமையான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என்பதை இச்சந்திப்பின் போது ஐ.நா. பிரதிநிதியிடம் தாம் விளக்கியதாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவி இராசையா துவாரகா அண்மையில் கைதான சம்பவம் உட்பட சில சம்பவங்களை தாம் சுட்டிக் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பிரதேசங்களில் தொடரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவரது கவனத்திற்கு தாம் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறும் நிலையில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள மற்றும் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சகலருக்கம் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.

சிறைச்சாலைகளில் அவசரகால சட்ட விதிகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் ஆகியன தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இச்சந்திப்பின் போது முன் வைத்துள்ளது.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு தாம் மேற்கொண்ட விஜயத்தையும் நேற்று மேற்கொண்ட விஜயம் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்த ஜோன் ஹோம்ஸ் அகதிகளின் மீள் குடியேற்றத்தில் தற்போது முன்னேற்றம் இருப்பதாகவும் கணிசமான குடும்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்பாக மீள் குடியேற்றப்படுவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Nov 18, 2009

வீடின்றி தவிக்கும் சரத் பொன்சேகா.



சரத் பொன்சேகவை எதிர் வரும் ஞாயிருக்கு முன்பதாக அரசு வழங்கிய வதிவடத்தை அரசிடமே ஒப்படைக்குமாறூ பாதுகாப்பு அமைச்சு கேட்ட்டுக்கொண்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் குறுகியகாலத்தில் பாதுகாப்பான இடம் ஒன்றை தேடிப்பெறுவது என்பது மிகவும் கடினம் என்று முன்னாள் பாதுகாப்பு பிரதம அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதை தான் சொல்வது உண்ட வீட்டிற்கு இரண்டகம் என்று.................................

ஜோன் ஹோம்ஸ் நம்பிக்கை.


வவுனியா நிவாரண முகாம்களிலுள்ள மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் முழுமையாக மீள்குடியேற்றப்படுவர் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று நான்குநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த அவர் இன்று வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு விஜயம் செய்த பின்னர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் மற்றும் முகாம்களிலுள்ள மக்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் தாம் திருப்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஒரே தேசம்: 1000 ரூபாய்




ஒரே தேசம் எனும் கொள்கையை எடுத்துக் காட்ட இலங்கை மத்திய வங்கி புதிய பணத்தாளினை அறிமுகம் செய்துள்ளது. ஒரு பக்கத்தில் சனாதிபதியின் படம், இலங்கை வரைபடம் மற்றும் நெற்கதிர் என்பவற்றையும் மறு பக்கம் மாவிலாறு வெற்றியின் களிப்பும் இருக்கும் வண்ணம் இத் தாள் அச்சிடப்பட்டுள்ளது. இத்தாளின் முதல் பிரதியை இலங்கை மத்திய வங்கி ஆளுனர் திரு அஜித் நிவார்ட் சனாதிபதியிடம் கையளித்தார்.

இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் (17.11.09) வெளியிடப்பட்ட புதிய 1000 ரூபாய் தாளினைப் படங்களில் காணலாம்.

Nov 17, 2009

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்மவம் தொடர்பான ஒருவர் கைது


மத்திய வங்கி குண்டுவெடிப்பு சம்மவத்தில் குற்றவாளி என தீர்மானிக்கபட்ட 2 நபர்களில் ஒருவர் வவுனியா செட்டிகுளத்தில் வைத்து கைது செய்யபட்டுள்ளார். இவர் 53 வயது உடையவர் என்றும் இதுவரை காலமும் இவர் இராணுவ நிவாரண முகமில் போலி தேசிய அடையள அட்டையுடன் தலைமறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது . இவர் தண்டனை காலம் 200 வருடம் ஆகும். மேலும் இந்த 2 நபர்களில் மற்றைய நபர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பது குறிப்பிடத்தகது.

Nov 15, 2009

மன்னார்-யாழ்ப்பாண பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்


மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி அரச பேருந்து சேவை இன்று (16-11-2009) முதல் ஆரம்பம். இன்று காலை ஆரம்பிக்கபடும் இந்த பேருந்து சேவை; மன்னாரிலிருந்து வவுனியா சென்று அங்கு சோதனைக்கு உட்படுத்த பட்ட பின்னர் யாழ் நோக்கி பய்ணிக்கும். இந்த பயணத்தை மேற்கொள்பவர்களை, மூன்று தேசிய அடையாள அட்டை பிரதிகளை கொண்டுவருமாறு அரசு வேண்டுகோள் விடுத்து்ள்ளது. இவ்வாறு நடைபெறும் நடவடிக்கைகளை பார்க்கும் போது தேர்தலுக்கான இராஜதந்திரமாக இருக்ககூடும் என்று எண்ணத்தோன்றுகிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான மாற்றங்கள் நடைபெறும் என்பதில் எதுவித ஐயப்பாடும் எதுவும் இல்லை.

நடைபெற்றது தேசிய மாநாடா? தேர்தல் பிரச்சாரமா?


உலகில் எந்தவொரு அதிகாரமிக்கவருக்கும் எமது நாட்டை தாரைவாகக நாம் தயார் இல்லை. மக்களுக்கு என்ன தேவையோ அதை நாம் கொடுப்போம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று கெத்தாராம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுத்ந்திரகட்சியின் 19வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இவ்மாநாட்டில் அரசியல்,படைவீரருக்கு நன்றி செலுத்தல், பொருளாதாரம், தேசிய ஒற்றுமை, சர்வதேச விவகாரம் போன்ற கோரிக்கைகள் ஏகமனதாக ஏற்று கொள்ளபபட்டது. மேலும் இந்த உரையின் நடுவே தமிழில் உரையாற்றிய போது "நாம் ஒரு தாய் மக்கள் இங்கு சிறுபான்மை என்று எவரும் கிடையாது. இங்கு அபிவிருத்தி நடைபெற்றுக்கொண்டுடிருக்கிறது. நாங்கள் பொய் வாக்குறுதிகள் கொடுப்பதில்லை. சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம். மக்கள் தீர்ப்பே எமது தீர்ப்பு" என்று ஜனாதிபதி தெரிவித்தார். இந்த உரைகளின் போது ஜனாதிபதி எதிர்க்கட்சி மேல் சுமத்திய குற்றமானது. அவர்களுக்கு பொதுவேட்பாளர்களை தேர்ந்தெடுக்கதெரியாது என்பதாகும்.
மேலும் மக்கள் மத்தியில் நடைபெறவேண்டியது ஜனாதிபதி தேர்தலா? பாராளுமன்ற தேர்தலா? என்ற கேள்வியையும் எழுப்பியபோது மக்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கினர்

Nov 11, 2009

கல்குடாவில் அரிய 'காட்டு அணுங்கு' விலங்கினம் கண்டுபிடிப்பு



கல்குடா பொலிஸ் பிரிவின், பாசிக்குடா பகுதியில், அநாதரவான நிலையில், இலங்கையில் அருகிவரும் காட்டு அணுங்கு (எறும்பு தின்னி) விலங்கு ஒன்றை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பொதுமக்களிடமிருந்து கல்குடா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வன ஜீவராசிகள் மட்டக்களப்பு சுற்றுவட்டார பாதுகாப்பு அதிகாரி என்.சுரேஷ்குமார் தலைமையில், உதவி பாதுகாப்பு அதிகாரி ஏ.டி.பெஞ்சமின், வன ஜீவராசி பாதுகாப்பு உத்தியோகத்தர்களான ஜீ.பிரசாந்த், எஸ்.குபேரலிங்கன், ரீ.தேனுவர, ரீ.தஸநாயக்க ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தக் காட்டு அணுங்கு விலங்கைக் கண்டுபிடித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறமான பெரியபுல்லு மலைக்காட்டுப் பகுதிக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் கொண்டு செல்லப்பட்ட இவ்விலங்கு, அங்கு சுதந்திரமாக விடப்பட்டதாக மட்டு.மாவட்ட அரச ஊடக அதிகாரி பி.ரீ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

Nov 9, 2009

வத்தளை புனித அன்னம்மாள் கல்வி நிறுவன கலை விழா







































வத்தளை புனித அன்னம்மாள் கல்வி நிறுவனத்தின் 32வது கலை விழா 08.10.2009 அன்று மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ் விழாவிலே பிரதம விருந்தினராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ.ஜோன் A.E.அமரதுங்க அவர்களும், சிறப்பு விருந்தினராக வத்தளை R.C.T.M பாடசாலை அதிபர் மபெல் ஃபெர்னாண்டோ புல்லே அவர்களும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்விலே சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றதுடன், வத்தளை புனித அன்னம்மாள் கல்வி நிறுவனத்தின் 32வது ஆண்டு புத்தக வெளியீட்டு வைபவமும் இடம் பெற்றதுடன் அத்துடன் ஆட்டம் ஆரம்பம் என்ற இசைத்தட்டு வெளியீடும் இடம்பெற்றது.

Nov 5, 2009

மறைந்து கிடக்கும் மருதமுனை அவலம்










ஆழிப்பேரலை வந்து அடங்கி விட்டாலும் , அது வந்து சென்ற தடயங்கள் இன்னுமும் இலங்கையில் அவ்வாறே இருக்கின்றது. அது போன்று ஒரு தடயம் தான் மேற்குறிப்பிடப்பட்ட புகைப்படம். மேற்குறிப்பிடப்பட்ட படமானது சம்மாந்துறையை அண்டிய பகுதியான மருதமுனை கடற்பரப்பு வீதியாகும். இந்த வீதி ஆழிப்பேரலையால் சேதமுற்ற போதும் இப்போது ஓரளவு சீரானது என்று சொல்லலாம். இதற்கான உரிமையை அரசாங்கம் கொண்டுள்ளது என்று நிச்சயம் எவராலும் கூறமுடியாது. ஏன் எனில் அரசாங்கத்திற்கு சீர்திருத்துவதற்கு பணம் வழங்கப்பட்ட போதும்... அவர்கள் ஆழிப்பேரலையால் சீர்குலைந்த வீட்டின் கற்களை கொண்டு இந்த வீதியை சீரமைத்து இருப்பதால். அந்த வீதிக்கு.. அங்கு இருக்கும் அல்லது அங்கு வாழ்ந்த ஒவ்வொருவரும் தான் அந்த உரிமையாளர்கள். இன்று இந்த உரிமையாளர்களின் நிலை குடில் வீடுகளில் வசிப்பதாகும். இவர்களை விசாரித்த போது அரசாங்கம் இவர்களுக்கு வேறு பிரதேசத்தில் வீடுகளை அமைத்து தருவதாக கூறியுள்ளதாக தெரிவிக்கின்ரனர். ஆனால் அங்குள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில் தங்களுக்கு தாங்கள் வசித்த் இடங்க்ளிலேயே இருப்பிடங்களை ஏற்படுத்தி தரமறுத்ததாக கூறுகின்றனர். அதனை அரசு பாதுகாப்பின்மை காரணமாக மறுத்துள்ளது. இந்த காரணத்திற்கு மக்கள் சொல்லும் பதிலகள்............

1) துறைமுகத்தை நாட்டின் நடுவெ நகர்த்தினால் பாதுகாப்பாக இருக்கும்.
2) ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லையாம்.
3) பணம் இருந்தால் இடமுண்டு.
4) தேர்தல் வருவது தெரிந்து யாராவது வெளினாடு செல்வார்களா?....... வருமானம் தரும் கரையைவிட்டு யாரும் செல்வாரா?

ஆக்கம் :- தர்ஷன்

Nov 4, 2009

குயில் பெற்ற மகுடம்


வானொலித்துறையில் குயில் என்ற உடன் அனைவரதும் மனகண் முன் வருபவர் திருமதி.இராஜேஸ்வரி ஷண்முகம் அவர்கள். தனது 12 வயது முதல் இன்று வரை வான் அலைகளில் குயிலாய் கூவி வருகின்றாள் அந்த பேசும் குயில்

”தமிழுக்கு அமுதென்று பெயர் – அந்த

தமிழ் இன்ப தமிழ் எங்கள்

உயிருக்கு நேர்……” என்று தமிழின் இனிமையை சொன்னவன் கவிஞன் பாரதி.

அந்த பாரதி பிறந்த எட்டயபுரத்தே உள்ள தென்பொதிகைத் தமிழ் சங்கம் 1995.01.29 அன்று நடத்திய முப்பெரும் விழாவிலே எங்கள் தேசத்து மொழ்வளச்செல்விக்கு “வானொலிக்குயில்” பட்டம் வழங்கி கெளரவித்தது.

எத்தனையோ குயில்கள் கானக்குயில், கவிக்குயில் மற்றும் சின்னக்குயில் என வலம்வர எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தது எமது வானொலிக்குயில். இந்த வானொலிக்குயில் இனிவரும் காலங்களில் தன் சேவயை உலகம் எங்கும் வியாபிப்பதற்காய் ஆண்டு தோறும் ஒரு குயிலை இனம் காண ஆசைப்பட்டது. அந்த வரிசையில் 2009ம் ஆண்டு இனம் காணப்பட்ட முதற்குயில் சம்மாந்துறை மண்ணிலே இனம் காணப்பட்டது. அந்த வானொலிக்குயிலின் மகுடத்திற்கு அழகு சேர்த்த முதற்குயிலின் பயணம்…………,

பெயர் :- அஹமட் இஸ்மாயில் சுஹைல்.

பிறப்பு :-1986-04-02 (சம்மாந்துறை).

ஆரம்பக்கல்வி :-சம்மாந்துறை முஸ்லீம் மத்திய மஹா வித்தியாலயம்

கொழும்பு- DS.சேநனாயக்க கல்லூரி.

நெருங்கிய நண்பர்கள் :-அப்துல் பாஷித், K.M.M.பெளஸான்,ஷாக்கிரா பானு, மோகன், திவாகர்,ரதினி, தாரணி.

பெற்ற பாக்கியம் :-நல்ல தாய் தந்தையர், குடும்ப அங்கத்தவர்கள்.

பிடித்தவை :-அறிவிப்புத்துறை,கிரிக்கெட் விளையாட்டு.

அதிகம் எதிர்பார்ப்பது :-யாவரும் என்னில் காட்டும் அன்பு.

சாதிக்க துடிப்பது :-தொலைகாட்சி வானொலித்துறையில் பிரபல அறிவிப்பாளராகுதல்.

சாதிக்கத்தடை :-எனக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். இதற்கு சில தடைகள்.

கல்வி நிலை :-Diploma in Radio Broadcasting

B.Sc (applied Science-2nd Year)

விருதின் கையால் விருது பெற்ற A.I.A.சுஹைல் பற்றி அவரின் பெற்றோரிடம் கேட்டபோது…………………

எங்கள் மகன் வானொலித்துறையில் கெளரவ விருது பெற்றமை அளவில்லா மகிழ்ச்சி. இலகுவில் மற்றவர்களை நம்பி எமாறாமல் தனது பிடிவாத குனத்தினை குறைத்து எதிர்காலத்தில் நல்ல அறிவிப்பாளராக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

நண்பர்கள் பாஷித்,பெளஸான்,பானு……

எங்கள் தோழன் சாதித்தமை நாங்கள் வெற்றி கொண்டது போல் மகிழ்ச்சி. அவனோடு எங்களுக்கு உறவு கொள்ள கிடைத்தமை எங்களுக்கு பெருமை. இருப்பினும் இவர் இன்னும் இன்னும் முன்னேறவேண்டுமாயின் இவரிடம் உள்ள பிடிவாத குணம் முற்கோபம் என்பனவற்றை அடியோடு இல்லாதொழிக்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை, வேண்டுகோள், ஆசை எல்லாமே………

சுஹைல் என்றால் யார்?

அன்பானவன் என்றும் பணிவு கொண்டவன், யார் மனதிலும் தன்னால் காயம் ஏற்படக்கூடாது என்பதில் அதீத கவனம் கொண்டவன். அறிவிப்புதுறையை தன் உயிர் நாடியாக கொண்டு மூச்சுவிடும் இவன் சாதிக்கத்துடிப்பது… அனேக நேயர்களுக்கு தன்னிடம் உள்ள கலத்திறனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆகவே, தனக்கு உரிய இடம் கிடைத்தால் இண்ட்ரு எப்படி ஒரு வானொலிக்குயலுக்கு மகுடம் சேர்த்தானோ அதுபோன்று நாளை இவன் சூடப்போகும் மகுடத்திற்கு பல இரத்தினக்கற்களை தேடும் முயற்சியில் வானொலியில் உதிக்க போகின்றான் இந்த சூரியன்……………………..

நேர்க்காணல்,தொகுப்பு

R.தர்ஷன்

Nov 3, 2009

DEMOCRACY THROUGH JOURNALISM

இந்த கற்கைநெறியின் இரண்டாவது பிரிவு எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் ஆரம்பமாகவுள்ளது. ஆர்வமூடையவர்கள் no:-3, Torrington avenue Colombo-07 என்ற முகவரிக்கு விண்ணபிக்கவும்.

1) அரசியல் விஞ்ஞானம்
2) சமூக விஞ்ஞானம்
உள்ளிட்ட பரந்த பாடப்பரப்பு இந்தகற்கை நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அச்சு,இலத்திரனியல் ஊடகங்களில் வேலை வாய்ப்பு கிடைக்க்கூடிய வகையில் கற்கைநெறி அமைந்துள்ளது.

நேர்கானல் - வாணி

இந்த கற்கை நெறியின் பயன்பாடுகள் தொடர்பாகவும், மாணவர்களின் வேலைத்திட்டங்கள் குறித்தும் மாணவி சுகந்தவாணி பாலதாசன் நேத்ரா அலைவரைசயில் நேர்கானல் ஒன்றை 30/10/2009 அன்று வழங்கியுள்ளார்.

நேர்முகபரீட்சைக்கு தோற்றியவர்கள்
1) சந்திரகாந்தா சந்திரராஜா
2) தாரணி இரவீந்திரன் ஆகியோர் நேத்ரா அலைவரிசையில் நேர்முகபரீட்சைக்கு தோற்றினர்.
1) ரசிகா கனேசன்
2) கொன்சி சந்தியாகு
3) திருஞானம் துசிஷ்யந்தன் ஆகியோர் தீபம் அலை வரிசையில் நேர்முக பரீட்சைக்கு தோற்றினர்.