Nov 15, 2009

மன்னார்-யாழ்ப்பாண பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்


மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி அரச பேருந்து சேவை இன்று (16-11-2009) முதல் ஆரம்பம். இன்று காலை ஆரம்பிக்கபடும் இந்த பேருந்து சேவை; மன்னாரிலிருந்து வவுனியா சென்று அங்கு சோதனைக்கு உட்படுத்த பட்ட பின்னர் யாழ் நோக்கி பய்ணிக்கும். இந்த பயணத்தை மேற்கொள்பவர்களை, மூன்று தேசிய அடையாள அட்டை பிரதிகளை கொண்டுவருமாறு அரசு வேண்டுகோள் விடுத்து்ள்ளது. இவ்வாறு நடைபெறும் நடவடிக்கைகளை பார்க்கும் போது தேர்தலுக்கான இராஜதந்திரமாக இருக்ககூடும் என்று எண்ணத்தோன்றுகிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான மாற்றங்கள் நடைபெறும் என்பதில் எதுவித ஐயப்பாடும் எதுவும் இல்லை.

நடைபெற்றது தேசிய மாநாடா? தேர்தல் பிரச்சாரமா?


உலகில் எந்தவொரு அதிகாரமிக்கவருக்கும் எமது நாட்டை தாரைவாகக நாம் தயார் இல்லை. மக்களுக்கு என்ன தேவையோ அதை நாம் கொடுப்போம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று கெத்தாராம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுத்ந்திரகட்சியின் 19வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இவ்மாநாட்டில் அரசியல்,படைவீரருக்கு நன்றி செலுத்தல், பொருளாதாரம், தேசிய ஒற்றுமை, சர்வதேச விவகாரம் போன்ற கோரிக்கைகள் ஏகமனதாக ஏற்று கொள்ளபபட்டது. மேலும் இந்த உரையின் நடுவே தமிழில் உரையாற்றிய போது "நாம் ஒரு தாய் மக்கள் இங்கு சிறுபான்மை என்று எவரும் கிடையாது. இங்கு அபிவிருத்தி நடைபெற்றுக்கொண்டுடிருக்கிறது. நாங்கள் பொய் வாக்குறுதிகள் கொடுப்பதில்லை. சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம். மக்கள் தீர்ப்பே எமது தீர்ப்பு" என்று ஜனாதிபதி தெரிவித்தார். இந்த உரைகளின் போது ஜனாதிபதி எதிர்க்கட்சி மேல் சுமத்திய குற்றமானது. அவர்களுக்கு பொதுவேட்பாளர்களை தேர்ந்தெடுக்கதெரியாது என்பதாகும்.
மேலும் மக்கள் மத்தியில் நடைபெறவேண்டியது ஜனாதிபதி தேர்தலா? பாராளுமன்ற தேர்தலா? என்ற கேள்வியையும் எழுப்பியபோது மக்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கினர்