May 20, 2010

அரசன் அன்று கொல்வானாம் தெய்வம் நின்று கொல்லுமாம்

இலங்கையில் சீரற்ற காலநிலை தொடர்கிறது. இதன் காரணமாக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மழை வெள்ளம் காரணமாக இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு, மாகாண சுகாதாரத் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

No comments: