
மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் இந்திய வீரர்கள் ரகளையில் ஈடுபட்டது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.
மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, ஆசிஷ் நெஹ்ரா, ஜடேஜா ஆகியோர் ரகளையில் ஈடுபட்டதாக மீது புகார் கூறப்பட்டது. வீரர்களின் இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக இன்று நடந்த கூட்டத்தின்போது, மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் இந்திய வீரர்கள் ரகளையில் ஈடுபட்டது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து 4 பேர் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.சி.சி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment