May 24, 2010

கண்ணைத்திறக்கனும் சாமி


சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சிக்கியிருக்கும் தனது மனைவி, 2 மகன்களை மீட்டுத் தருமாறு நெல்லையை சேர்ந்த பழ வியாபாரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.
பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்தவர் சகாய ஜார்ஜ்(40). பழவியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்ய விமலா (35). மகன்கள் அருண் பிரகாஷ் (14), அஜய் ஆண்ட்ரோ (12). நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங்கிடம், சகாயஜார்ஜ் நேற்று காலை புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2006ம் என் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நெல்லை விடுதியில் தங்கி இருந்த சேலம் ஆத்தூரைச் சேர்ந்த ஓசோமணி கொடுத்த விளம்பரத்தை பார்த்து அவரிடம் எனது மனைவியை அழைத்துச் சென்றேன். தன்னை நித்யானாந்தாவின் சீடர் என்றும், தீராத வியாதிகளை தீர்த்து வைப்பேன் என்றும் ஓசோமணி கூறினார். அதை நம்பி எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினேன். ஒருநாள் ஓசோமணி, எங்கள் வீட்டுக்கு வந்து ஆரோக்யவிமலாவுக்கு அக்குபஞ்சர் வைத்தியம் செய்வதாக கூறி ரூ.50 ஆயிரம் வாங்கினார். நித்யானந்தாவின் பெருமைகளை கூறி, எனது மனைவிக்கு ருத்ராட்ச மாலை அணிவித்தார். அதன்பிறகு எனது மனைவி நித்யானந்தாவின் தீவிர பக்தையானாள். வீடு முழுவதும் நித்யானாந்தாவின் படங்களை வைத்து பூஜித்து வந்தார்.

எனது மனைவி, மகன்களை ஓசோமணி பெங்களூர் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். நித்யானா ந்தாவால் செயல்படுத்தப்பட்டு வரும் `பிசி‘ சேவை திட்டத்தில் எனது மனைவியை உறுப்பினராக்கினார்.

இதற்காக ரூ.5 ஆயிரத்தையும் ஓசோமணி பெற்றுக் கொண்டார். நித்யானந்தா பங்கேற்கும் ஆன்மீக சொற்பொழிவு, தியான பீடங்களுக்கும் எனது மனைவியை அழைத்துச் சென்றார். இது எனக்கு பிடிக்காததால் கண்டித்தேன்.

இந்நிலையில் சாமியார் நித்யானாந்தாவின் பாலியல் லீலைகள் பத்திரிகையில் வெளியாயின.

இதை பார்த்த நான், ஓசோமணியிடம் போனில் பேசினேன். எனது மனைவி, குழந்தைகள் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக கூறினார். ஆசிரமத்துக்கு சென்ற போது என் மனைவியைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஓசோமணியையும் சந்திக்க முடியவில்லை. என் மனைவி, மகன்களை வசியம் செய்து அழைத்துச் சென்ற ஓசோமணி மற¢றும் நித்யானாந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனைவி, மகன்களை அவர்களிடமிருந்து மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்

No comments: