May 25, 2010

சோதனையிலும் சாதனை


சர்வதேச ரீதியாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளில் இலங்கை 7 வது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்தம் காரணமாக 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரினாலும் நாட்டில் குழப்பநிலை மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் வரிசையில் பாக்கிஸ்தான் முதலாவது இடத்தில் உள்ளது.

இதேபோல, கொங்கோ குடியரசு இரண்டாவது நிலையிலும், நீண்ட யுத்தத்தினால் பாதிப்படைந்த சூடான் 3 வது இடத்திலும், சோமாலியா நான்காவது இடத்திலும் உள்ளன.

இஸ்லாமிய போராளிகளின் ஆதிக்கம் பெரிய அளவில் உள்ள பிலிப்பீன்ஸ் 5 வது இடத்தில் உள்ள அதேவேளை, ஆறாவது இடத்தில் கொலம்பியா என அந்த ஆய்வறிக்கையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக அதிகரித்து வரும் யுத்தங்கள் மற்றும் உள்நாட்டு மோதல்கள் காரணமாக 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் நீண்டகாலமாக வாழ்வதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: