Dec 7, 2009

100 ஆயுதப்புலிகள் கல்விபுலிகளாய்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 100 முன்னாள் உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் வழிகாட்டல்களின் காரணமாக குறித்த நபர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 100 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் தமது கல்வியை இவர்கள் தொடர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற சில விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு அராசங்கம் அதிக முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments: