
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனிக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை - இந்திய அணிகளுக்கிடையே நாக்பூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பந்து வீச்சில் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெறும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மட்டுமே டோனி விளையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வாய்மூலமாக இந்த விடயம் குறித்து அவருக்கு அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ கடிதம் இன்னமும் டோனிக்குக் கிடைக்கப் பெறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடைபெற்ற போட்டியில் சுமார் 45 நிமிட நேரத்தை இந்திய அணியினர் மேலதிகமாக எடுத்துக் கொண்டுள்ளனர். தோல்வியைத் தழுவியது இந்தியா இந்திய இலங்கை அணிகளுக்கிடையில் நாக்பூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது
No comments:
Post a Comment