Dec 21, 2009

அரசியல் பாட்டு பாட நான் தாயாராக இல்லை ஆஷா


ஜனாதிபதிக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு இந்திய பாடகி ஆசா போஸ்லேவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஆசா போஸ்லே இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இலங்கையின் இசையமைப்பாளர்கள் பாத்திய மற்றும் சந்தோஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில் ஆசா போஸ்லே இலங்கை வந்திருந்தார். இதன் போது அவருடன் சந்திப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி தமக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுமாறு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு நேரடியாக மறுப்பு தெரிவித்த ஆசா போஸ்லே, இவ்வாறான செயல்கள் தமக்கு அபக்கீர்த்தியை ஏற்படுத்தும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதிக்கும் ஆசா போஸ்லேக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு காட்சிகளை அரசாங்க பிரசார ஊடகமாக ரூபாவாஹினி மற்றும் நேத்ரா அலைவரிசை என்பன திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்தன.

இதற்கும் ஆசா போஸ்லே தமது அதிருப்தியை வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

தர்மா said...

முதல்வரால் ஞாயிறுதோறும் நடாத்தப்படும் அரசியல் நிகழ்ச்சி தற்ப்போது தனது சுய வடிவத்தை கடந்த நிகழ்ச்சியில் காட்டியிருந்தது.. இவர்களுக்கும், தமிழரின் ஆதர்வு அதிகமாம் இப்படித்தான் தமிழர் நிலத்தை புதுசாக பர்த்துவந்த இன்னும் சிலரும் நினைக்கிறார்கலாம், தமிழர் இவர்களை நம்பி இறுக்கிறர்களாம்.. அதுதான் புத்திசாலித்தனமாக கேள்வி கெட்கிறார் இன்னும் ஒருவர் பிழையைத்திருத்தி சாக்கடைக்கு அழைக்கின்றார்...... கேக்கயாரும் இல்லை என்றா? இவர்கள்?