Dec 21, 2009

போராட்டம் முடிந்ததால் பேராட்டம் போடும் பெரும்பான்மை சூதாட்டம்
































இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய ஆயுத விநியோகிக் கப்பலான பென்சூன் என்ற பிரின்ஸ் கிறிஸ்டினா, தென் கிழக்கு ஆசிய கடல் பகுதியிலிருந்து நேற்று மதியம் 12.42க்கு கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட இந்தக் கப்பலை கடற்படைத்; தளபதி திசர சமரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இது இலங்கைக்குக் கிடைத்த மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பமாகும்.

புலிகளின் கப்பல் வலையமைப்பை எம்மால் வீழ்த்த முடிந்ததை இந்தக் கப்பல் கொண்டுவரப்பட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி
தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலின் களஞ்சியத்தில் உலங்குவானூர்த்தியொன்றை இறக்குவதற்கான வசதிகள் காணப்படுகின்றன. இந்தக் கப்பலில் இருந்து உலங்குவானூர்த்தியொன்றை அனுப்பி அதை வன்னியில் தரையிறக்கி, புலிகளின் தலைவர்களை அழைத்துச் செல்லும் திட்டங்கள் காணப்பட்டதாகவும் கடற்படையினர் முழுமையாக கடற்பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் இந்தத் திட்டம் ஈடேறவில்லை எனவும் திசர சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். 8,300 தொன் எடைகொண்ட இந்தக் கப்பலில் இன்மார்செட் என்ற செய்மதி தொலைபேசி கட்டமைப்பும் காணப்படுகிறது. பிரின்ஸ் கிறிஸ்டினா என்ற இந்தக் கப்பலை கப்டன் தசநாயக்க தலைமையிலான குழுவினரே இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரும், வெளிநாடொன்றின் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இந்தக் கப்பல் உள்ளிட்ட புலிகளின் மூன்று கப்பல்களை இலங்கை அரசாங்கத்தினால் கைப்பற்ற முடிந்துள்ளது. மீதமுள்ள இரண்டு கப்பல்கள், அடுத்த மாதத்திற்குள் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார். இந்தக் கப்பல் இலங்கைக் கடற்படையினரின் மற்றுமொரு கப்பலாக பயன்படுத்தப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

No comments: