
ஆனைக்கோட்டை வராளி கோவிலடி அருகிலுள்ள வீடு ஒன்றில், அன்னை மரியின் படத்திலிருந்து கைகள் தெரியும் அதிசயம் நடந்துள்ளது. ஆனைக்கோட்டை வராளி கோவிலடி வீடு ஒன்றில் அன்னை மரியின் படம் வைத்து வழிபட்டு வந்தனர். நேற்றிரவு இந்தப் படத்தில் இரண்டு கரங்கள் மாதாவைத் தாங்கியபடி நிற்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த அற்புதத்தைக் காண்பதற்காக பலர் அவ்வீட்டுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதற்கு முன்னரும் பருத்தித்துறையில் இரு இடங்களில் மாதாவின் படத்தில் அதிசயமாகக் கரங்கள் தெரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 comments:
எம்மாக்களை மனோகனேசனை நம்பியதா???
தயவுசெய்து நான் தரும் தகவளை உங்கள் செய்தியில் இணைக்கவும்
எம் போராட்டம் தனி நாடுக்காகத்தான். எம்மக்களின் எதிர்பாப்பும் தனி நாடுதான். யாரும் ஸ்ரீலங்கா ஜனநாயகத்தையோ.. மனோ தரும் ஜனநாயக நம்பிகையிலோ தங்கியில்லை. யுத்தம் நடைபெரும் போது இந்த மனோவும் கொழும்பில் நாம் எதிர்ப்பை தெரிவிக்க முன்வந்த போதும் எம்மை தடுத்து மெள நம் சாதித்தவர், பின் மணவர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதம் நடாதினார்கள். அதிலும் இவர் இல்லையே. மலையகத்தமிழரின் சம்பல உயர்த்துவதிலும் அவர்பலம், ஜன நாயகம் பார்த்தோம் டானே? இனுக்கு எம் வாக்கா?? நாமும் என்ன ஏமாந்தவர்களா? கொழும்பில் எம்மக்களுகு உதவினார்த்தான் அது பணத்துக்காக.. இவரை நன்கு அறிந்தவன் நான். இவர் சகோதரியும் பணத்துக்காக்த்தான் எம்மை வெளி நாடு அனுபினார், அதுவும் கொள்ளை அடிதானே? இதற்க்கு மனோ அவர்களே உங்கள் பதில்??? சிவாஜிலிங்கம் ஐயா எடுத்த முடிவு சரி. நாம் சிங்க்ளவணை இனிமேலும் நம்ப மாடோம். அதுவும் எம்ப்டையை எதிர்த்தவருக்கு எம்வாக்கு சென்றால் அது சர்வதேசரீதியில் நாம் ஸ்ரீலங்காவுடன் இணைந்திருக்க சம்மதம் என்றே தென்படும்.
யாருக்கும் அடிபணியாது இந்த வேங்கை
மீண்டும் பாயும்.....
nibanni@gmail.com
ம்ம்ம்... இப்ப கொஞ்சக்காலமாய் கடவுளின் அதிசயங்கள் நடக்கிறதாய் செய்திகள் வருகின்றன... குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அதிகம் நிகழ்ந்துள்ளன... இப்போது யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்துள்ளது... முன்பு பிள்ளையார் யாழ்ப்பாணத்தில் பால்குடித்த அதிசயம் நிகழ்ந்தது... அதன் பின்னர் மிகப்பெரிய இடப்பெயர்வை யாழ் மக்கள் சந்திக்க நேர்ந்தது... ஆகவே இவையனைத்தையும் நல்லவையாக மட்டும் நோக்க முடியாது...
ஆம்,இலங்கைத் தமிழர்கள் இந்த தேர்தலைப் புறக்கணித்தாக வேண்டும்;அது மட்டுமே தங்கள் இன்னுயிரைத் தந்த அப்பாவி தமிழர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கமுடியும்..!
ஆனாலும் இந்த கட்டுரைக்கு எனது பின்னூட்டம் பொருந்தாது என்று தோன்றுகிறது;அது சம்பந்தமாக நான் சொல்லக்கூடியது,மாதா பால் குடித்தாலும் கரம் முளைத்தாலும் கண்ணில் இரத்தம் வடிந்தாலும் பாதாளத்துக்குச் செல்லும் எண்ணற்ற ஆத்துமாக்களையும் பாவ மன்னிப்பையும் மறுமையினைக் குறித்த நம்பிக்கையினையும் அளித்திட இயலாது..!
உங்கள் கருத்துரைகளுக்கு நன்றி..... நண்பர் ஒருவர் மேல் அவர் செய்தியை பிரசுரிகுமாறு கேட்டுக்கொண்டுள்ளர் ஆனால் இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் கீழ் எந்த ஒரு செய்தியையும் ஆதாரம் இன்றி வழங்க முடியாது. தனிப்பட்ட ஒரு நபரை விமர்சிக்கும் உரிமை இலங்கையில் இல்லை.
Post a Comment